[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்
  • BREAKING-NEWS நீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு

உடலில் 86 காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி: குஜராத்தில் நிகழ்ந்த கொடூரம்

girl-found-dead-in-surat-might-have-been-held-captive-raped-doctor

குஜராத்தில் உடலில் 86 காயங்களுடன் சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதனையடுத்து சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் சிறுமி ஒருவர் உடலில் காயங்களுடன் கிடந்துள்ளார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து உடலை கைப்பற்றி போலீசார் விசாணை மேற்கொண்டனர். இதில் சிறுமியின் உடலில் 86 காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. கொல்லப்பட்டுள்ள சிறுமி இன்னும் யார் என கண்டுபிடிக்கப்படவில்லை. இதனிடையே சிறுமியை அடைத்துவைத்து யாரேனும் பல நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் வயது 9 முதல் 11 வரை இருக்கலாம். இந்த சம்பவம் தொடர்பாக யாரேனும் தகவல் அளித்தால் அவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என போலீஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தடயவியல் துறையினரும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close