[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை

அரசுப் பள்ளிகளுக்கு சாதிப் பெயர்கள் - சுதந்திர இந்தியாவில் இப்படியும் ஒரு கேவலம்

in-madhya-pradesh-govt-shakes-off-caste-tags-by-renaming-80-schools

மத்திய பிரதேசம் மாநிலத்தில் அரசுப் பள்ளிகள் சாதிப் பெயர்களை தாங்கி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாடு விடுதலையாகி 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. ஆனால், இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு அரசுப் பள்ளிகளின் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர்கள் இருப்பது மிகவும் வேதனைக் குரிய விஷயம். ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயரால் உள்ள அரசுப் பள்ளியில் அந்த சாதிப் பின் புலத்தில் உள்ள மாணவர்கள் மட்டும் படிக்கும் நிலையை நினைத்து பார்த்தாலே வெட்கக்கேடாக உள்ளது. அரசுப் பள்ளிகளில் இப்படியொரு நிலையா?. 

மத்திய பிரதேச தலைநகர் போபாலில் இருந்து 780 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிங்குரவ்லி மாவட்டத்தில் 15 முதல் 50 வருடம் பழமை வாய்ந்த 80 அரசுப் பள்ளிகளில் இந்த நிலை இருந்துள்ளது. இவை அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகள். தற்போதுதான் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையால் அந்த பள்ளிகளின் பெயரில் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. இந்தப் பள்ளிகளில் பெரும்பாலும் உயர்சாதிகளில் பெயர்கள்தான் அதிகமாக இருந்துள்ளது. 

இதுகுறித்து உள்ளூர் ஆசிரியர் ஒருவர் கூறுகையில், “இந்தப் பகுதிகளில் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்ட போது, பெரும்பான்மையாக எந்த சமுதாயத்தினர் உள்ளார்களோ அந்த சமுதாயத்தின் பெயர்தான் பள்ளிக்கு வைக்கப்பட்டது. மற்ற உயர்சாதிகளின் பெயர்கள் வைக்கப்பட்ட போது பிரச்னைகள் எதுவும் வரவில்லை. எதிர்பாராத விதமாக ஒரு பள்ளிக்கு தலித் சமுதாயத்தின் பெயர் வைக்கப்பட்டதால் அந்தப் பள்ளிக்கு தலித் மாணவர்களை தவிர மற்றவர்கள் போக தயங்கினர். உயர்சாதியினரை சேர்ந்தவர்கள் அந்த பள்ளிக்கு செல்லவில்லை. ஒரு சாதியினருக்கும் மட்டும் அந்த பள்ளி என்ற நிலை பின்னர் உருவாகிவிட்டது. இது மெல்ல மெல்ல மாணவர்கள் மத்தியில் பிரிவினையை உருவாக்கியது. தங்கள் சாதி பெயர் உள்ள பள்ளிக்கு அதே சாதியைச் சேர்ந்த மாணவர்கள் சென்றனர்” என்றார். 

சிங்குரவ்லி மாவட்ட ஆட்சியர் அனுராக் சவுத்ரி கூறுகையில், “மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கு நாங்கள் சென்ற போது பள்ளிகளுக்கு ‘பசோர் டொலா’, ‘ஹரிஜன் பஸ்தி’, ‘கோதன் டொலா’, ‘பைகா பஸ்தி’, ‘கைர்வரி டொலா’,’விர்யானி டொலா’ உள்ளிட்ட பெயர்கள் சூட்டப்பட்டு இருந்ததை பார்த்தோம். இதுகுறித்து கிராம மக்களிடம் கேட்ட போது, ‘சாதியின் பெயரில் பள்ளிகள் இருப்பதால் மாணவர்கள் மத்தியில் பிரிவினை அதிகரித்து வருகிறது’ என்று கூறினர். பின்னர் மார்ச் மாதம் சாதியின் பெயரில் உள்ள பள்ளிகளை அடையாளம் காணும் பணிகளை மேற்கொண்டோம். 80 கிராம பஞ்சாயத்துகள் அதுபோல் இருப்பது கண்டறியப்பட்டது. கிராம கமிட்டியிடம் சாதிப் பெயரை மாற்றி தேசத்தலைவர்களின் பெயர்களை வைக்குமாறு கேட்டுக் கொண்டோம்” என்றார். 

தற்போது அந்த பள்ளிகளில் சாதிப் பெயர்கள் இல்லை. அவைகள் நீக்கப்பட்டு காந்தி, நேரு, அம்பேத்கர், சுவாமி விவேகனந்தர், சந்திர சேகர் ஆசாத், உள்ளிட்டோரின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் சாதி பெயர்களை தாங்கி இருப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று சமூக செயல்பாட்டாளர்கள் வலியுறுத்துகின்றனர். 

இதுகுறித்து மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளர் ராகேஷ் மால்வியா கூறுகையில், “சிலர் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தி செயல்பட்டத்து மகிழ்ச்சி அளிக்கிறது. பள்ளிகளுக்கு சாதிப் பெயர்கள் வைக்கப்பட்டது ஒரு சமூக பிழை. ஆனால், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக இந்த பிரச்னை உள்ளது. மாணவர்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. ஆசிரியர்களும் பாடம் நடத்தும் போது பாகுபாட்டை சந்திக்கிறார்கள். இதுபோல், பள்ளிகளுக்கு சாதிப் பெயர்களை வைப்பது சாதிய உணர்வுகளை பள்ளி மாணவர்களிடையே வளர்க்கும். அது நாட்டிற்கே பேராபத்தாக மாறும்” என்றார்.  

மத்திய பிரதேச ஆசிரியர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஆஷுதோஷ் பாண்டே, “இந்த நடவடிக்கை முன் கூட்டியே எடுத்திருக்க வேண்டும். பள்ளி என்பது மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும். ஆனால், பள்ளிகளின் பொருத்து மாணவர்களின் மேல் சாதி முத்திரை குத்துவது மிகவும் தவறான ஒன்று” என்றார். 

பள்ளிக் கல்வித் துறையைப் பொருத்தவரை ஒவ்வொரு மாவட்டத்திற்கு பள்ளிக் கல்வி அதிகாரி ஒருவர் இருப்பார். அவருக்கு கீழ் பல அதிகாரிகள் இருப்பார்கள். இவர்கள் பலமுறை பள்ளிகளுக்கு ஆய்வு மேற்கொள்ள வருவார்கள். அவர்கள் எப்படி இப்படி இத்தனை நாட்கள் இதனை கண்டுகொள்ளாமல் இருந்தார்கள் என்பது தெரியவில்லை. அரசு அதிகாரிகளின் அலட்சியம் தான் இத்தனை நாட்கள் இந்த நிலை நீடிப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close