[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

மான்வேட்டை வழக்கில் அதிரடி தீர்ப்பு: நடிகர் சல்மான் குற்றவாளி, தபு, சைஃப் விடுவிப்பு!

salman-khan-could-face-up-to-6-years-in-jail

மான்வேட்டை வழக்கில் நடிகர் சல்மான் கான் குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. 

பிரபல இந்தி நட்சத்திரங்கள் சல்மான் கான், சைஃப் அலிகான், நடிகை தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோர், 1998 ஆம் ஆண்டு, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடந்த ’ஹம் சாத் சாத் ஹே’ என்ற இந்தி படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டனர். அப்போது, அங்குள்ள காட்டில் இரவு வேட்டைக்குச் சென்றனர். இதில் அரிய வகை மான்களை, நடிகர் சல்மான் கான் வேட்டையாடியதாக புகார் எழுந்தது. 

இதையடுத்து சல்மான் கான் உட்பட 7 பேர் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த 2007-ம் ஆண்டு சல்மான்கான் உள்ளிட்ட 7 பேருக்கு ஜோத்பூர் கிளை நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இந்த வழக்கில் சல்மான், ஜாமின் பெற்றிருந்தார். பின்னர் கடந்த 20 ஆண்டுகள் இந்த வழக்கு இழுத்தடிக்கப்பட்டது. கடந்த மார்ச் 28-ம் தேதி நடந்த வழக்கு விசாரணையின்போது அனைத்து சாட்சியங்களும், விசாரணைகளும் நிறைவடைந்ததாகக் கூறப் பட்டது. இதையடுத்து வழக்கின் தீர்ப்பை நீதிபதி தேவ்குமார் காத்ரி ஒத்தி வைத்தார்.  தீர்ப்பு இன்று வெளியாவதாகக் கூறப் பட்டது.

இதையொட்டி பாலிவுட் நடிகர்கள் சல்மான் கான், சைஃப் அலிகான், தபு உள்ளிட்டோர் கோர்ட்டில் இன்று ஆஜராகினர்.  சல்மான் கான் குற்றவாளி என தீர்ப்புக் கூறப்பட்டது. வழக்கில் இருந்து சைஃப் அலிகான், தபு, சோனாலி ஆகியோர் விடு விக்கப்பட்டனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close