[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்
  • BREAKING-NEWS 100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்
  • BREAKING-NEWS நெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

தேர்தல் நேரத்தில் கலவரம் வரும்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

cauvery-management-board-delay-central-blames-karnataka-assembly-election

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள மத்திய அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த மூன்று மாத கால அவகாசமும் கோரியுள்ளது.


காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக உச்சநீதிமன்றம் அளித்த அவகாசம் 29ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. இதில் கர்நாடகா சட்டப்பேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ள மத்திய அரசு, காவிரி உணர்வுப்பூர்வமான பிரச்னை என்றும், இந்தப் பிரச்னை கடந்த காலங்களில் மிக மோசமான சட்ட ஒழுங்கு பிரச்னைகளை ஏற்படுத்தி உயிர்களுக்கும், சொத்துகளுக்கும் சேதமேற்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது. மாநில தேர்தல் நேரத்தில் மத்திய அரசு காவிரி விவகாரத்தில் ஒரு அமைப்பை உருவாக்கி அறிவிக்கை வெளியிட்டால் அது பெரும் கலவரமாக வெடித்து, தேர்தல் நடவடிக்கையை பாதித்து சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் என மத்திய அரசு அஞ்சுவதாக கூறப்பட்டுள்ளது. 

இந்த சூழலில், காவிரி நதிநீர் பங்கீடு தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ள காவிரி மேலாண்மை வாரியத்திற்கு மாறாக மாநிலங்களுக்கிடையேயான நதிநீர் சர்ச்சைகள் சட்டம் 1956 பிரிவு 6A -வின் கீழ் வேறு திட்டம் ஒன்றை உருவாக்க மத்திய அரசுக்கு உரிமை உள்ளதா என விளக்கவேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. ஒருவேளை தீர்ப்பாயம் கூறியது போல் காவிரி மேலாண்மை வாரியம்தான் அமைக்கப்படவேண்டும் என்றால் தீர்ப்பாயம் கூறியதுபோல் ஒரு முழுமையான தொழில்நுட்ப அமைப்பாக இல்லாமல், மேலாண்மை வாரியம் திறம்பட செயல்பட வசதியாக பிரச்னையின் தன்மையை கருத்தில் கொண்டு நிர்வாக மற்றும் தொழில்நுட்ப குழுவாக மாற்றம் செய்ய அரசுக்கு உரிமை உள்ளதா என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 

மாநிலங்களுக்கிடையேயான நதிநீர் சர்ச்சை சட்டம் பிரிவு 6A-வின் கீழ் மத்திய அரசால் உருவாக்கப்படும் வாரியத்திற்கு, காவிரி நதிநீர் தீர்ப்பாயம், காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட கடமைகளிலிருந்து வேறு கடமைகளும் இருக்கலாமா என்றும் மத்திய அரசு விளக்கம் கோரியுள்ளது. புதிய திட்டம் உருவாக்குவது தொடர்பாக மாநிலங்கள் வெவ்வேறு கருத்துகளை தெரிவித்து வரும் சூழலில், உச்சநீதிமன்றம் வேறு வழிகாட்டுதல் அல்லது உத்தரவுகளை தரலாம் என்றும் மத்திய அரசின் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 16ம் தேதி அளித்த தீர்ப்பை அமல்படுத்த மூன்று மாத காலம் அவகாசம் கோரியுள்ளது.

Advertisement:
Related Tags : Cauvery management boardCauvery
Advertisement:
Advertisement:
[X] Close