[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட காற்று மாசு குறைந்துள்ளது
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: கந்தர்பால் அருகே கண்ட்டில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS சென்னையில் பிரபல வணிக வளாகத்தின் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி இளைஞர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் உள்ளாட்சித் தேர்தல் குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை
  • BREAKING-NEWS சிவசேனாவின் அரவிந்த் சாவந்த் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததையொட்டி, அவரது கனரக தொழில், பொதுத்துறை நிறுவனங்கள் துறை பிரகாஷ் ஜவடேகருக்கு கூடுதல் பொறுப்புப்பாக அளிக்கப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS தமிழகத்தில் வரும் 14ஆம் தேதிமுதல் 16ஆம் தேதிவரை 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS அயோத்தியில் ராமர் கோயில்: அறக்கட்டளை அமைக்கும் பணி தொடக்கம்

வன்கொடுமை வீடியோ காட்சிகளை வழங்கவேண்டும்: நடிகர் திலீப் உயர்நீதிமன்றத்தில் மனு

dilip-appeals-to-the-kerala-high-court

பிரபல கேரள நடிகையை ஓடும் காரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் குற்ற அறிக்கையோடு சேர்த்து போலீஸாரால் தாக்கல் செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வீடியோ காட்சிகளை தனக்கு வழங்க கோரி நடிகர் திலீப் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். நடிகையின் வீடியோ காட்சிகள் வெளியில் பரவுவதற்கும், நடிகையை மிரட்டுவதற்கும்  அதிக வாய்ப்புள்ளது என்று கூறி கொச்சி அங்கமாலி நீதிமன்றம் ஏற்கெனவே நடிகர் திலீப்பின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.

கேரள பிரபல நடிகை (பாவனா) கடந்த 2017ம் ஆண்டு ஃபெப்ரவரி 17ம் தேதி, காரில் கடத்திச்செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு அதை வீடியோவும் எடுத்ததாக கூறப்படும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நடிகர் திலீப் கடந்த ஜூலை 10ம் தேதி கைது செய்யப்பட்டு கொச்சி ஆலுவா கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார். 85 நாட்கள் சிறைவாசத்திற்குப்பின் கடந்த அக்டோபர் 3ம் தேதி நிபந்தனை ஜாமின் வழங்கியது கேரள உயர் நீதிமன்றம்.

இந்நிலையில் இந்த வழக்கில் கடந்த நவம்பர் 11ம் தேதி கேரள போலீஸார் கொச்சி அங்கமாலி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்ற அறிக்கை தாக்கல் செய்தனர். முதல் தகவல் அறிக்கையில் 14வது குற்றவாளியாக இருந்த நடிகர் திலீப் குற்ற அறிக்கையில் 8வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். குற்ற அறிக்கையோடு நடிகை ஓடும் காரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வீடியோ காட்சிகளும் வழக்கின் முக்கிய ஆவணங்களாக நீதிமன்றத்தில் போலீஸாரால் சமர்ப்பிக்கப்பட்டன.

போலீஸாரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நடிகை பாலியல் வன்கொடுமை வீடியோ காட்சிகளில் குளறுபடிகள் நடந்துள்ளதாகவும், இதை நிரூபிக்க தனக்கு அந்த வீடியோ காட்சிகளை தனக்கு வழங்குமாறும் நடிகர் திலீப் கொச்சி அங்கமாலி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு கடந்த ஃபெப்ரவரி 7ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ”நடிகர் திலிப்பிற்கு வீடியோ காட்சிகளை வழங்கினால் அது வெளியில் பரவுவதற்கும், சம்பந்தப்பட்ட நடிகையை மிரட்டுவதற்கும் அதிக வாய்ப்புள்ளது,” எனவும் அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.அரசு தரப்பு வாதத்தை ஏற்ற கொச்சி அங்கமாலி குற்றவியல் நடுவர் நீதிமன்றம், நடிகை பாலியல் வன்கொடுமை வீடியோ காட்சிகளை வழங்க முடியாது எனவும், அதை வழங்க கோரிய நடிகர் திலீப்பின் மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டது. 

இதையடுத்து மீண்டும் நடிகர் திலீப், நடிகையின் பாலியல் வன்கொடுமை காட்சிகளை தனக்கு வழங்கக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை திங்கள்கிழமை விசாரிக்கிறது கேரள உயர் நீதிமன்றம்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close