[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்தார் பி.வி.சிந்து.
  • BREAKING-NEWS வேதாரண்யத்தில் இரண்டு தரப்பினரிடையே மோதல்: காவல்நிலையம் மீது கல்வீச்சு
  • BREAKING-NEWS காஞ்சிபுரம் கங்கையம்மன் கோயில் குளத்தில் கிடந்த மர்மப் பொருள் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு.
  • BREAKING-NEWS தமிழகத்தில் எந்த விதத்திலும் தீவிரவாதம் தலைதூக்க முடியாது: ஜெயக்குமார்
  • BREAKING-NEWS அருண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்

ஆதிவாசி இளைஞர் கொல்லப்பட்டதற்கு நியாயம் கேட்கும் சமூக வலைத்தளவாசிகள்..!

people-against-kerala-youth-murder

கேரளாவில் அரிசி திருடியதாக கூறி ஆதிவாசி இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு எதிராக நடிகர் மம்மூட்டியும் தனது கண்டனக் குரலை பதிவு செய்துள்ளார்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி பகுதியில் வசித்துவந்த ஆதிவாசி இளைஞர் மது. மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் முக்காலி பகுதியில் கையில் ஒரு பையுடன் சென்றிருக்கிறார். இதனைப் பார்த்த அப்பகுதியினர் அவர் கடையில் இருந்து அரிசி திருடியதாக கூறி அவரை கட்டி வைத்து சரமாரியாக தாக்கியிருக்கின்றனர். தாக்கும்போது அந்தக் கும்பல் செல்ஃபி மற்றும் வீடியோக்களையும் எடுத்திருக்கின்றனர். பின்னர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் வழியிலே அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழக்கிறார். அந்த இளைஞர் தாக்கப்படும்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவின. இதனையடுத்து இந்தச் சம்பவம் நாடு முழுவதும் தெரியவந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டார். தற்போது வரை 7 பேரை பிடித்துள்ள போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, பழங்குடியினரின் நிலத்தையும், உரிமைகளையும் பறித்துக்கொண்டு அவர்களின் உயிரையும் பறிக்கிறோமா என கேரளாவில் கடும் விவாதங்கள் எழுந்துள்ளன. மேலும் கோடிகளில் கொள்ளையடிப்பவர்கள் ஜாலியாக வெளிநாட்டிற்கு தப்பிவிடுகிறார்கள். ஆனால் வயிற்றிற்காக உணவுப் பண்டங்களை திருடியவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்ற விமர்சனமும் சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளன.

இந்நிலையில் இச்சம்பவத்திற்கு மலையாளத் திரையுலகின் மிக முக்கிய நடிகரான மம்மூட்டியும் தனது கண்டனக் குரலை பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "கொல்லப்பட்ட மதுவை ஆதிவாசி என்று அழைக்காதீர்கள். அவர் என் இளைய சகோதரர். என்னை மன்னித்துவிடுங்கள் மது" என மம்மூட்டி உருக்கமாக பதிவிட்டுள்ளார். இதுதவிர பலரும் இந்த சம்பவத்திற்கு தங்களது கண்டனக் குரலை பதிவு செய்து வருகின்றனர். அத்தோடு குற்றவாளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close