[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்காமல் இருக்க மோடி ஒன்றும் பீடா விற்பவர் அல்ல நாட்டின் பிரதமர் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்கக்கோரும் மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்ற
  • BREAKING-NEWS நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தஷ்வந்த் மேல்முறையீடு செய்தால் எதிர்கொள்வோம் - சிறுமி தரப்பு வழக்கறிஞர் கண்ணதாசன்
  • BREAKING-NEWS எனது மகளுக்கு ஏற்பட்டது போல் யாருக்கும் ஏற்படக்கூடாது - போரூர் சிறுமியின் தந்தை பாபு
  • BREAKING-NEWS சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட வழக்கில் தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை அறிவிப்பு
  • BREAKING-NEWS தினகரன் தனது அணிக்கு குக்கர் சின்னம், பெயர் வழங்கக் கோரிய வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS காவிரி விவகாரத்தில் 23ஆம் தேதி நடைபெறவிருந்த திமுகவின் அனைத்துக்கட்சி கூட்டம் ரத்து -ஸ்டாலின்

ஒரு குதிரைக்கு ரூ.2 கோடி: பேரம் பேசிய சல்மான், ’நோ’ சொன்னார் ஓனர்!

a-horse-owner-said-no-to-the-actor-salman-s-rs-2-crore-bid

அரிய வகை குதிரையை வாங்க ரூ.2 கோடி வரை தருவதாக நடிகர் சல்மான் கான் கூறியும் அதை ஏற்க மறுத்துவிட்டார் ஒரு குதிரை ஓனர்.

சூரத் அருகில் உள்ள ஓல்பாட் நகரைச் சேர்ந்தவர் சிராஜ்கான் பதான். இவர், சகாப் என்ற அரிய வகை குதிரை ஒன்றை வளர்த்து வருகிறார். இந்தக் குதிரை சும்மா நடந்தாலே 43 கி.மீ வேகத்தில்தான் செல்லும். இந்த சகாப்புக்கு 5 வயது இருக்கும்போது, ராஜஸ்தானின் பலோதாரா காட்சியில் விற்பனைக்கு வந்தது. அப்போது 14.5 லட்சம் கொடுத்து வாங்கினார் பதான். இந்த வகைக்கு இணையாக இன்னும் இரண்டு குதிரைகள் மட்டுமே இருக்கிறதாம். ஒன்று அமெரிக்காவில், இன்னொன்று கனடாவில். 

இந்தக் குதிரையைப் பற்றிக் கேள்விபட்ட பஞ்சாப் முன்னாள் முதல்வர் பாதலின் குடும்பம்,1.11 கோடி ரூபாய்க்கு விலை பேசியிருக்கிறது. மறுத்துவிட்டார் பதான். இதையடுத்து சமீபத்தில் நடிகர் சல்மான் கான் சார்பாக அவரது ஏஜெண்ட் 2 கோடி ரூபாய் தருவதாகக் கூறியிருக்கிறார். அதற்கும் மறுத்துவிட்டார் பதான்.

‘இந்தக் குதிரைக்கு பல சிறப்புகள் உள்ளன. இது சாதாரண ஒன்றல்ல. மனித உணர்வை புரிந்து நேசிக்கும் ஒன்று. ஒரு கூட்டத்துக்குள் சென்றால் ஆட்களை மிதித்துவிடும் என்று எல்லோரும் பயப்படுவார்கள். ஆனால், சகாப் அப்படியல்ல. பக்கத்தில் ஆட்களைக் கண்டால் ஒதுங்கி செல்லும். சகாப்பின் அம்மா பாகிஸ்தான் - சிந்தி இனத்தைச் சேர்ந்தது. அப்பா, ராஜஸ்தான் - சுதர்வாலி இனத்தைச் சேர்ந்தது. 19 நேரடி ரேஸில் பங்கேற்றுள்ள இந்த குதிரை எதிலும் தோற்றதில்லை’ என்கிறார் பதான்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close