[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது
  • BREAKING-NEWS வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்
  • BREAKING-NEWS மேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை
  • BREAKING-NEWS சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை
  • BREAKING-NEWS தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு
  • BREAKING-NEWS தமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்

மக்களவை,சட்டப்பேரவைக்கு ஒன்றாக தேர்தல் நடத்தத்திட்டம்?

lok-sabha-legislative-assembly-to-conduct-elections-together

மக்களவைக்கும், சட்டப்பேரவைக்கும் நாடுமுழுவதும் ஒன்றாக தேர்தல் நடத்துவதற்கான சூழலை ஏற்படுத்துமாறு தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களிடம் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். 

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய பிரதமர் மோடி, மத்திய அரசின் வளர்ச்சித்திட்டங்களை அனைத்து மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் அமல்படுத்த முடிவதில்லை என்றும், தனித்தனியே தேர்தல் நடத்தப்படுவதால் கூடுதல் செலவு ஏற்படுவதாகவும் கூறினார். இதனால் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை ஒன்றாக நடத்துவதற்கு உகந்த சூழலை ஏற்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

கூட்டத்தில் பாஜக தலைவர் அமித்ஷாவும் கலந்துகொண்டார். முன்னதாக நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும், சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஒருமித்த கருத்து உருவாக வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close