[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

அசாம் மாநில காவல்துறை மம்தா பானர்ஜி மீது வழக்கு

assam-police-case-on-west-bengal-chief-minister-mamata-banarjee

மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மீது அசாம் மாநிலத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தின் அகமதுபூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசும்போது, அசாம் மாநிலத்தில் பணிபுரிந்து வரும் மேற்கு வங்க மாநில மக்களை, அங்கிருந்து வெளியேற்ற மத்திய அரசு சதி திட்டம் தீட்டியுள்ளது. இதற்காகவே மத்தியில் ஆளும் பாஜக அரசு, தேசிய குடிமக்கள் பதிவேட்டில் திருத்தம் கொண்டு வருகிறது. கடந்த 31-ஆம் தேதி இது தொடர்பான வரைவு பதிவேடு வெளியிடப்பட்டுள்ளது. அதில் அசாம் மாநிலத்தில் உள்ள வங்க மொழி பேசும் மக்களின் பெயர்கள் சேர்க்கப்படவில்லை. திட்டமிட்டு அவர்களை வெளியேற்ற முயற்சி நடக்கிறது என்று மம்தா பானர்ஜி கூறினார்.

மம்தா பானர்ஜி மொழி ரீதியாக மக்களிடையே பகை உணர்வைத் தூண்டி விடுவதாக கவுகாத்தி உயர் நீதிமன்ற வழக்கறிஞர் தைலேந்திரநாத் தாஸ், விவசாய அமைப்பின் தலைவர் பிரதீப் கலிதா இருவரும் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அசாம் மாநில காவல்துறையினர் அந்த இரு புகார்களையும் ஒருங்கிணைத்து மம்தா பானர்ஜி மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தியத் தண்டனை சட்டம் 153 ஏ பிரிவின் கீழ் மம்தா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கவுகாத்தி இணை காவல் ஆணையர் ரஞ்சன் கூறினார். இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வழக்குப்பதிவு செய்து மம்தாவின் போராட்டத்தைத் தடுத்து விட முடியாது என்று திரிணாமுல் காங்கிரசார் கூறியுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close