[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS பணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ
  • BREAKING-NEWS பாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை
  • BREAKING-NEWS நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா!
  • BREAKING-NEWS பெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது! - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

ஒகி புயல் பாதிப்பை‘தேசிய பேரிடராக’ அறிவிக்க வேண்டும்: ஸ்டாலின் கடிதம்

stalin-letter-to-nirmala-seetharaman

கன்னியாகுமரியில் காணாமல் போன மீனவர்களை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்,கன்னியாகுமரி மாவட்டத்தில் காணாமல் போன மீனவர்கள் விவரம் தமிழக அரசிடம் இல்லை என  குற்றம்சாட்டியுள்ளார். மேலும் ஆயிரம் மீனவர்களுக்கு மேல் காணவில்லை என்று, அவர்களின் குடும்பத்தார் கண்ணீருடன் கதறுவதை புறகணிக்க முடியாது என்பதை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஒகி புயலால் காணாமல் போன கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் பிரச்னை மிக தீவிரமானதாகவும், உணர்வுப்பூர்வமானதாகவும் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ள அவர், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மீனவர்களை காப்பாற்ற துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். மேலும், ஒகி புயல் பாதிப்பினை, ‘தேசிய பேரிடராக’ மத்திய அரசு அறிவிக்க முயற்சிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.  

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close