[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு
  • BREAKING-NEWS ஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS சென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை
  • BREAKING-NEWS சென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்
  • BREAKING-NEWS சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது
  • BREAKING-NEWS சேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது
  • BREAKING-NEWS புதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்

பிரதமர் மோடியிடம் 5 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கிய யோகி ஆதித்யநாத்

yogi-adityanath-donated-rs-5-crore-to-prime-minister-modi

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஒகி புயல் நிவாரண நிதியாக ரூ 5 கோடி ரூபாய் வழங்கியுள்ளார். 

கடந்த சில நாட்களுக்கு முன் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தை புரட்டி போட்ட ஒகி புயல் நேற்று, குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களை நோக்கி நகர்ந்தது. இந்த புயலால் குமரியில் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் இழப்பீடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடந்து வருகிறது. இந்நிலையில், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ரூ. 5 கோடி மதிப்பிலான காசோலையை பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜகவினர் வெற்றி பெற்றனர். இந்த வெற்றிக்கு பிறகு முதல்வர் ஆதித்யநாத் பிரதமரை நேரில் சந்தித்தார். அந்த சந்திப்பில் ரூ.5 கோடி மதிப்பிலான காசோலையை பிரதமர் மோடியிடம் அளித்துள்ளார். தமிழகம், கேரளா மற்றும் ஒகி புயல் பாதிக்கப்பட்ட பகுதியின் நிவாரண பணிக்கு இந்த நிதி உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close