[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வீடியோ கேம் ஒரு மன நோய்: பெற்றோருக்கு எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஒகேனக்கல்லில் பரிசல்கள் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் 3ஆம் நாளாக தடை
  • BREAKING-NEWS கோவை குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல 9ஆம் நாளாக வனத்துறை தடை விதிப்பு
  • BREAKING-NEWS திருப்பதி அருகே வனப்பகுதியில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்
  • BREAKING-NEWS சுங்கச்சாவடி தாக்குதல், என்.எல்.சி முற்றுகை போராட்ட வழக்கில் வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத அனுமதிக்கப்படும்- மத்திய அமைச்சர் ஜவடேகர்
  • BREAKING-NEWS ஜூலை 12 இல் எஸ்.வி.சேகர் ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும்- நெல்லை நீதிமன்றம்

விமானத்தில் இருந்து குதித்து உயிர் தப்பிய பெண் பைலட்

girl-pilot-who-jumped-from-plane-and-saved-her-life

ஹைதராபாத்தில் பெண் பைலட் ஒருவர் விபத்துக்குள்ளான விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பியுள்ளார். 

ஹகிம்பேட் பகுதியில் விமானப்படை பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. நேற்று இங்குள்ள சிறிய ரக பயிற்சி விமானத்தை இயக்க, பெண் பைலட் ரஷி ரெய்னா பயிற்சி மேற்கொண்டிருந்தார். தொழில் நுட்பக் கோளாறு காரணமாக திடீரென்று விமானம் பழுதடைந்தது. இதை எதிர்பாராத ரஷி செய்வதறியாமல் திகைத்தார்.ஆபத்தை புரிந்து கொண்ட அவர், பறக்கும் விமானத்தில் இருந்து கீழே குதித்தார். ரஷி விமானத்தில் இருந்து குதித்ததற்கு பின்பு, விமானம் தீப்பிடித்து எரிந்து கீழே விழுந்தது. 

பெண் பைலட்டின் சமயோஜித புத்தியால் அவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். சத்தம் கேட்டு அந்த பகுதிக்கு விரைந்த பொதுமக்கள், ரஷியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாவது தொடர் கதையாகி வருவதாக அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.    

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close