[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்
  • BREAKING-NEWS நீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS முதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு
  • BREAKING-NEWS குண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.22 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.69 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு
  • BREAKING-NEWS டெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...

முக்காடு அணிய மாணவிகளுக்கு அனுமதி மறுப்பு: கிறிஸ்தவ பள்ளி மீது முஸ்லீம் பெற்றோர் புகார்

up-school-stops-two-muslim-girls-from-wearing-headscarf-on-campus

முக்காடு அணிந்தபடி மாணவிகளை தங்கள் வளாகத்துக்குள் அனுமதிக்க முடியாது என்று கிறிஸ்தவ பள்ளி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

உத்தரபிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவ பள்ளி ஒன்று உள்ளது. இங்கு 7-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் இரண்டு பேர், பர்தா அணிந்து வந்துள்ளனர். அதோடு தலையில் முக்காடு அணிந்தும் வந்துள்ளனர். இதை அனுமதிக்க முடியாது என்று பள்ளி நிர்வாகம் அந்த மாணவிகளின் பெற்றோருக்கு கடிதம் அனுப்பியது. அதில், பள்ளி வளாகத்தில் மத சம்பிரதாயத்துக்கு இடம் இல்லை என்றும் முக்காடு அணிவது பள்ளி சீருடை திட்டத்துக்கு எதிராக இருப்பதாகவும் கூறியிருந்தது. 

’இஸ்லாம் மதத்தின் படி பெண் குழந்தைகள் 9 வயது வரை தலைமுடியை மறைத்து இருக்க வேண்டும். அதற்காக முக்காடு அணிந்து பள்ளிக்கு செல்கிறார்கள். பள்ளியின் சட்ட திட்டங்களுக்கு எதிராக இருப்பதாகக் கூறி அனுமதி மறுக்கின்றனர்’ என்று மாணவியின் பெற்றோர் கூறியுள்ளனர்.
இதையடுத்து இதற்கு தீர்வு காண, மாவட்ட மாஜிஸ்திரேட்டிடம் முறையிட்டுள்ளனர். இந்தப் பிரச்னை அந்த மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close