[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடு முழுவதும் தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் மட்டுமே அனுமதி- உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆன்லைனில் பட்டாசுகளை விற்க தடை விதித்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நாடு முழுவதும் பட்டாசு விற்பனைக்கோ, தயாரிக்கவோ தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS பணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ
  • BREAKING-NEWS பாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை

எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு ஜிஎஸ்டி?

council-slashes-rates-of-over-178-items-cuts-tax-for-restaurants-as-part-of-gst-overhauling

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட 4 மாதங்களிலேயே பெரும்பாலான பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. 178 பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது மிகப்பெரிய மாற்றமாக கருதப்படுகிறது. 
அதாவது ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட132 நாட்களில் 213 பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது. அவற்றில் 180 பொருட்களுக்கு 28 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டிருந்தது. 28 சதவிகித வரி விதிப்பு பட்டியலில் இருந்து 80 சதவிகித பொருட்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட நேரத்தில், 250 பொருட்களுக்கு 28 சதவிகித வரி விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வெறும் 50 பொருட்களுக்கு மட்டுமே 28 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது.
சிகரெட் போன்ற பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்களும், ஆடம்பர பொருட்களுமே அந்த உயர் வரி விதிப்பு பட்டியலில் இருக்கின்றன. இது ஜிஎஸ்டியில் செய்யப்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றமாக கருதப்படுகிறது. 
சாக்லேட், மரச்சாமான்கள், சோப்பு, அழகுசாதனப்பொருட்கள், ஷாம்பூ, மார்பிள், டைல்ஸ், தொலைக்காட்சி, வானொலி சாதனங்கள், உள்ளிட்ட 178 பொருட்களுக்கு 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது. வெட் கிரைண்டர், பீரங்கி வாகனம் ஆகியவை 18 சதவிகித வரி விதிப்பில் இருந்து 12 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. பதப்படுத்தப்பட்ட பால், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, நீரிழிவை ஏற்படுத்தாத உணவு, அச்சக மை, மூக்குக் கண்ணாடியின் ஃபிரேம், விவசாய இயந்திரங்கள் உள்ளிட்ட 13 பொருட்களுக்கான வரி 18 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. 
கடலை மிட்டாய், பொறி உருண்டை, சமையல் காரப்பொடி உள்ளிட்ட 6 பொருட்களுக்கான வரி 18 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. மீன்பிடி வலைகள், ஆடைகள், கயிறு உள்ளிட்ட 8 பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 12 சதவிகித வரி 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close