[X] Close
JUST IN
 • BREAKING-NEWS காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி உத்தரப்பிரதேசத்தில் இருந்து ரயில் மூலம் துணை ராணுவப்படையினர் சென்ட்ரல் வந்தனர்
 • BREAKING-NEWS காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்வாகியிருப்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது - தமிழிசை
 • BREAKING-NEWS மத்திய பாஜக ஆட்சியை அகற்றுவதற்கு ராகுல் காந்தியே சிறந்த மாற்றுத் தலைவர் - திருநாவுக்கரசர்
 • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக ராகுல் காந்தி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
 • BREAKING-NEWS குஜராத் தேர்தலில் எல்லைமீறி பாஜக பரப்புரை செய்து வருகிறது என முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட்
 • BREAKING-NEWS மீனவர்கள் மீட்காததை கண்டித்து சென்னை ஆட்சியர் அலுவலகம் முன் நாளை போராட்டம்- ஸ்டாலின்
 • BREAKING-NEWS தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
 • BREAKING-NEWS வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு
 • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,815 கனஅடியில் இருந்து 2,375 கன அடியாக குறைந்தது
 • BREAKING-NEWS காணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி நாகையில் கடலில் இறங்கி பெண்கள் போராட்டம்
 • BREAKING-NEWS இலங்கைக்கு படகில் கடத்தப்படவிருந்த ரூ.75 லட்சம் கஞ்சா ராமேஸ்வரம் அருகே பறிமுதல்
 • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர்: பாரமுல்லா பகுதியில் பாதுகாப்பு படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
 • BREAKING-NEWS உலக ஹாக்கி லீக் தொடரில் வெண்கலம் வென்றது இந்திய அணி
இந்தியா 11 Oct, 2017 07:56 AM

குடியரசுத் தலைவர் தலைமையில் மாநில ஆளுநர்கள் கருத்தரங்கம்

48th-governors-conference-to-deliberate-on-new-india-2022

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில், அனைத்து மாநில ஆளுநர்கள் கருத்தரங்கம் அக்.12 மற்றும் அக்.13 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற இருக்கிறது.

நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளை பூர்த்தி செய்யும் 2022-ஆம் ஆண்டில், ‘புதிய இந்தியா 2022’ எனும் முழக்கத்தோடு பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற இருக்கும் கருத்தரங்கின் முதல் நாளில், புதிய இந்தியா 2022-க்கான சாத்தியக் கூறுகள் குறித்து நிதி ஆயோக் சார்பில் விளக்கப்பட இருக்கிறது. அதேபோல, புதிய இந்தியா 2022-க்கான கட்டமைப்பு வசதிகள், புதிய இந்தியா 2022-க்கான மக்கள் சேவைகள் எனும் இருவேறு தலைப்புகளில் ஆளுநர்கள் விவாதிக்க இருக்கிறார்கள்.

இரு தலைப்புகளில் நடைபெறும் விவாதங்களின்போதும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் கருத்தரங்கில் பங்கேற்பார்கள். 13-ம் தேதி நடைபெறும் 2-வது நாள் கருத்தரங்கில், மாநிலங்களில் உயர்கல்வி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் பயிற்சிகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற இருக்கும் 48-வது கருத்தரங்கு இது என்றாலும், குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் கருத்தரங்கு இதுவாகும்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close