இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் ரெஸ்டாரெண்டில் குஜராத் மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் காலாவதியான உணவுப் பொருட்கள் சிக்கியது.
சோதனை நடத்தப்பட்ட ரெஸ்டாரெண்டை ஜடேஜாவின் சகோதரி நைனா கண்காணித்து வந்தார். ஜடேஜாவின் ரெஸ்டாரெண்ட் உட்பட மூன்று இடங்களில் ராஜ்கோட் முனிசிபல் கார்பரேசன் அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
நீண்ட நாட்கள் பாதுகாக்கப்பட்டு வந்த வேக வைத்த உணவுப் பொருட்கள், பூஞ்சைகள் படந்த பிரெட், காலாவதி தேதி குறிப்பிடப்படாத உணவுப் பொருட்கள் ஆகியவற்றை சோதனையில் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட காலாவதி ஆன உணவுப் பொருட்களை அதிகாரிகள் அழித்தனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி மற்றும் விரேந்தர் சேவாக் ஆகியோரும் சொந்தமாக ரெஸ்டாரெண்ட் நடத்தி வருகின்றனர்.
கடுகு டப்பாவும், பேங்க் டெபாசிட்டும் ! பெண்களுக்கு சில டிப்ஸ்
அதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..? ஒரு பார்வை..!
நாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்
11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்
தீண்டாமைக்கு சம்மட்டி அடி ! தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்