[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு
  • BREAKING-NEWS ஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS சென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை
  • BREAKING-NEWS சென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்
  • BREAKING-NEWS சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது
  • BREAKING-NEWS சேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது
  • BREAKING-NEWS புதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்

இறந்த பின்பும் வாழும் கவுரி லங்கேஷின் எழுத்துக்கள்...

gauri-langshin-s-words-living-after-death

பெங்களூரில் சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் பிரிட்டன் நாட்டின் 'அன்னா பொலிகோவஸ்கயா' விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

"லங்கேஷ் பத்திரிக்கா" என்ற இதழை நடத்தி வந்தவர் கவுரி லங்கேஷ் . இவர் பெங்களூரில் மிகவும் பிரபலமான பெண் பத்திரிக்கையாளர். சமீபத்தில் கவுரி லங்கேஷ் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் கொல்லப்பட்டு ஒரு மாத காலம் கடந்தும் கொலையாளி யார்? என்பது இதுவரை கண்டுப்பிடிக்கப்படவில்லை. இந்நிலையில் லண்டனில் இருக்கும் புகழ்பெற்ற அமைப்பான 'ரா இன் வார்' என்ற தனியார் தொண்டு அமைப்பு பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைக்காக போராடும் பத்திரிக்கையாளர்கள் மற்றும் போராளிகளுக்கு வழங்கப்படும் " அன்னா பொலிகோவஸ்கயா" என்ற விருதை கவுரி லங்கேஷ்க்கு அறிவித்து சிறப்பித்துள்ளது. 

இந்த விருதை பெற்றுக்கொண்ட கவுரி லங்கேஷின் உறவினர்கள், இந்த விருதுக்கு கவுரி தேர்வு செய்யப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும், இதை பெறுவதற்கு அவர் இல்லாமல் போனது பெரிய வருத்தத்தை ஏற்படுத்துகிறது என்றும் தெரிவித்துள்ளனர். கவுரி லங்கேஷின் நெருங்கிய நண்பரான நடிகர் பிரகாஷ்ராஜ், கவுரியின் கொலை தொடர்பாக பிரதமர் மோடி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டி சமீபத்தில் சர்ச்சையில் சிக்கி உள்ளார். இது தொடர்பான வழக்கு இன்று லக்னோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.      
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close