[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

பணத்தை நேர்மையாக செலவிடுங்கள்: அருண் ஜேட்லி

arun-jaitley-speech-about-tax

நாட்டின் வளர்ச்சியை கேட்பவர்கள், நாட்டிற்கு தேவையான வரியை முறையாக செலுத்துங்கள் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். 

அரியானாவில் நடைபெற்ற தேசிய சுங்கவரி மற்றும் போதை மருந்து தடுப்பு தினம் மற்றும் இந்திய வருவாய்த்துறை அதிகாரிகள் 67வது கூட்டத்தில் அருண் ஜேட்லி பங்கேற்றார். அப்போது உரையாற்றி அவர், வருவாய்த்துறை அதிகாரிகள் இந்தியா பொருளாதாரத்தில் உயிர்த்துடிப்பு என்று கூறினார். வரி ஏய்ப்பு என்பது நாட்டு மக்களிடையே காலப்போக்கில் வழக்கமாகி விட்டதாகவும், அதற்காகவே ஒருங்கிணைந்த வரிமுறை கொண்டுவரப்பட்டதாகவும் குறிப்பிட்டார். அதன்மூலம் நாம் முன்னேற்றத்திற்கு இடமளித்துள்ளதாகவும், உரிய பலனை பெற்றுள்ளதாகவும் கூறினார். வரிவிதிப்பு முறையில் மேற்கொண்ட சீர்திருத்தங்களே இத்தகைய முன்னேற்றத்திற்கு காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து பேசிய அவர், நாடு பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டும் என்று கூறுபவர்கள் முறையாக வரி செலுத்த வேண்டும் என்றும், பணத்தை நேர்மையாக செலவிடுங்கள் என்றும் அவர் கச்ேட்டுக்கொண்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close