[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

புதிய கட்சி தொடங்கினார் நாராயண் ரானே

former-congress-leader-narayan-rane

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மூத்த தலைவர் நாராயண் ரானே புதிய கட்சியை தொடங்குவதாக தெரிவித்துள்ளார். 

மாஹாராஷ்டிர மாநில முன்னாள் முதலமைச்சராக இருந்தவர் நாராயண் ரானே. கடந்த 2014ஆம் ஆண்டு காங்கிரஸ் தோல்வி அடைந்த பிறகு, தீவிர அரசியலில் இருந்து விலகினார். பின்னர் காங்கிரஸ் மாநில தலைவர் அசோக் சவானின் செயல்பாட்டை விமர்சிக்கத் தொடங்கினார். அத்துடன் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, மஹாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரை அடுத்தடுத்து சந்தித்தார். இதனால் இவர் பாஜகவில் இணையப்போகிறார் என அரசியல் நோக்கர்கள் பலரும் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் புதிய கட்சியை தொடங்கப்போவதாக நாராயண் ரானே தெரிவித்துள்ளார். மஹாராஷ்டிர ஸ்வாபிமான் என்ற கட்சிப் பெயரையும் அவர் வெளியிட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close