[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக அரசியல் களத்தில் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம்; ஆனால் மணக்காது- மு.க ஸ்டாலின்
  • BREAKING-NEWS அதிமுக ஆட்சியே சரியில்லை என்கிறேன்; இந்த ஆட்சி சரியில்லை என்பதாலேயே நான் வருகிறேன்- கமல்ஹாசன்
  • BREAKING-NEWS கேரளாவில் 5 நாட்களாக நடைபெற்று வந்த தனியார் பேருந்துகளின் வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டது
  • BREAKING-NEWS அரசியலில் ரஜினிகாந்த்- கமல்ஹாசன் இணைப்பை காலம் தான் தீர்மானிக்கும்- கருணாஸ் எம்.எல்.ஏ
  • BREAKING-NEWS கோச்சடையான் படத்திற்கான கடனை எப்போது திருப்பி செலுத்துவீர்கள்?- உச்சநீதிமன்றம் கேள்வி
  • BREAKING-NEWS புதுச்சேரியில் நகராட்சி வரி உயர்வுக்கு எதிரான கடையடைப்பு போராட்டத்திற்கு மீனவர்கள் ஆதரவு
  • BREAKING-NEWS இன்றைய பெட்ரோல் விலை- ரூ.74.38, டீசல் விலை- ரூ.65.67

சனிக்கிழமைகளில் சிறப்பு நீதிமன்றம் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

constitute-spl-benches-to-hear-criminal-appeals-on-saturdays

குற்றவியல் மற்றும் சிறைக்கைதிகள் தொடர்பான மனுக்களை விசாரிக்க சனிக்கிழமைகளில் சிறப்பு நீதிமன்ற அமர்வுகளை அமைக்க, அனைத்து உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கடிதம் எழுதியுள்ளார்.

அனைத்து மாநில உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளுக்கும் தீபக் மிஸ்ரா எழுதியுள்ள கடிதத்தில், பல்வேறு உயர்நீதிமன்றங்களில் பல குற்றவியல் முறையீடுகளும், சிறைக் கைதிகளின் முறையீடுகளும் நிலுவையில் உள்ளது. இந்த மனுக்களை விசாரித்து முடிப்பதில் ஏற்படும் தாமதம், ஒட்டுமொத்த நீதி மற்றும் நிர்வாகத்தின் செயல்திறன் மீதும் கேள்வியை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இதுபோன்ற மனுக்களை தாமதமின்றி விசாரிக்க, சனிக்கிழமைகளிலும் சிறப்பு நீதிமன்ற அமர்வுகளை அமைக்கலாம் என தீபக் மிஸ்ரா உயர்நீதிமன்றங்களில் தலைமை நீதிபதிகளுக்கு அந்தக் கடிதத்தின் மூலம் யோசனை தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close