[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை

முத்தலாக் வழக்குத் தொடுத்த பெண்ணுக்கு கொலை மிரட்டல்!

triple-talaq-petitioner-faces-threats-writes-to-mamata

முத்தலாக்கிற்கு எதிராக வழக்குத் தொடுத்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் வருவதாக புகார் கூறப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் மூன்று முறை ‘தலாக்’ சொல்லி விவாகரத்து செய்வது சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றம் கடந்த 22-ம் தேதி தீர்ப்பளித்தது. இந்த வழக்கை தொடர்ந்த 5 முஸ்லிம் பெண்களில் ஒருவர், இஷ்ரத் ஜகான். இவர், மேற்கு வங்க மாநிலம் கோலாபாரி பகுதியில் வசிக்கிறார். விவாகரத்தான இவருக்கு 13 வயதில் மகளும், 7 வயதில் மகனும் உள்ளனர். 

இந்நிலையில், தீர்ப்பு வெளியானதில் இருந்து அவருக்கும், குழந்தைகளுக்கும் மாமனார் மற்றும் அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்து தினமும் கொலை மிரட்டல் வந்துகொண்டிருப்பதாக இஷ்ரத் ஜகானின் வழக்கறிஞர் நஸியா இலாஹி கான் கூறியுள்ளார். அவர் மேலும் கூறும்போது, இதுபற்றி கோலாபாரி போலீஸில் புகார் செய்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்பகுதியினரும் அவரை அருவருப்பான வார்த்தைகளால் திட்டுகின்றனர். சமூகத்தால் புறக்கணிக்கப்படுகிறார். அவரை காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை’ என்றார். 

இதையடுத்து பாதுகாப்பு கேட்டு, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு இஷ்ரத் ஜகான் கடிதம் அனுப்பியுள்ளார். இதன் நகல், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆளுநர் கேசார்நாத் திரிபாதி, பீகார் முதல் நிதிஷ் குமார் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close