[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா
  • BREAKING-NEWS தமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை

பெங்களூரு ரயில் நிலையங்களில் இந்தி பெயர் பலகைகள் அகற்றம்

hindi-name-boards-have-been-taken-out-at-bangalore-railway-stations

பெங்களூரு மெட்ரோ ரெயில் நிலையங்களின் அறிவிப்பு மற்றும் பெயர்ப் பலகைகளில் இந்தி மொழி இடம் பெற்றமைக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அந்த பெயர்ப்பலகைகள் அகற்றப்பட்டுள்ளன. 

கர்நாடக மாநிலத்தின் நம்ம மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள பெயர்ப்பலகைகள் கன்னடம், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மும்மொழிகளில் உள்ளது. இந்த பெயர்ப்பலகைகளில் இருந்து இந்தி மொழியை நீக்க வேண்டும் என்று கன்னட அமைப்புகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டங்கள் நடத்தி வருகின்றன. சில இடங்களில் போராட்டக்காரர்கள் தாங்களாகவே பெயர் பலகையில் இருந்து இந்தி மொழியை அகற்றி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

தொடர் போராட்டங்கள் காரணமாக முதல் அமைச்சர் சித்தராமையாவுக்கும் நெருக்கடி அதிகரித்தது. இதனையடுத்து, கொச்சி மற்றும் சென்னையில் செயல்பட்டு வரும் மெட்ரோ ரெயில் நிலையங்கள் பயன்படுத்தப்படும் மொழிக் கொள்கை குறித்து சர்வே எடுக்க உத்தவிட்டார். அதில், சென்னையில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்களில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்தப்படுவதும், கொச்சி மெட்ரோ ஸ்டேஷன் ரெயில் நிலையங்களில் மலையாளம், ஆங்கிலம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் எழுதியுள்ளதும் தெரியவந்தது.

இதனையடுத்து, கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா மத்திய நகர்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு கடிதம் எழுதினார். அதில், நம்ம மெட்ரோ ரெயில் நிலைய பெயர்ப்பலகைகளில் உள்ள இந்தி மொழியை நீக்கும் முடிவை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். மேலும், பெங்களூர் மெட்ரோ நிர்வாகத்திற்கு, இந்தி மொழி அல்லாமல் புதிய பலகைகளை தயாரிக்குமாறு பரிந்துரையும் அவர் செய்திருந்தார். இந்நிலையில், மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பெயர்ப்பலகைகள் இன்று அகற்றப்பட்டன. விரைவில், இந்தி அல்லாத புதிய பலகைகள் வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close