[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மக்கள் அதிமுக பக்கம் இருப்பதால் ரஜினி கூறும் அதிசயம், அற்புதம் எங்களுக்கு சாதகமாகவே அமையும் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் முறை அதிகார துஷ்பிரயோகத்திற்கும், குதிரை பேரத்திற்கும் வழிவகுக்கும் - திருமாவளவன் எம்.பி.
  • BREAKING-NEWS 2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS 2021 ஆம் ஆண்டில் அதிமுவை சேர்ந்த ஒருவரே முதல்வராக இருப்பார் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணியே உள்ளாட்சித் தேர்தலிலும் தொடர்கிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS 2021ம் ஆண்டு அரசியலில் தமிழ் மக்கள் மிகப் பெரிய அதிசயத்தை, அற்புதத்தை நூற்றுக்கு நூறு சதவீதம் நிகழ்த்துவார்கள் - ரஜினிகாந்த்

திருப்பதியில் வார இறுதியில் மீண்டும் திவ்ய தரிசன டோக்கன்

divya-darshan-token-back-weekend-backyard-darshan-token

திருப்பதி திருமலையில் வார இறுதி நாட்களில், திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவதை, தேவஸ்தானம் மீண்டும் துவக்கி உள்ளது.

பாத யாத்திரை பக்தர்களின் எண்ணிக்கை, 50 ஆயிரத்தை தாண்டியதால் வார இறுதி நாட்களில், திவ்ய தரிசன டோக்கன் வழங்குவது நிறுத்தப்பட்டது. கடந்த வாரம் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சோதனை முறையில் 20 ஆயிரம் திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டன. அப்போது, பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்தில் சுவாமி தரிசனம் செய்ய முடிந்தது. இதனால் மீண்டும் வார இறுதி நாளில் திவ்ய தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது.

திருப்பதிக்கு சாதாரண நாட்களில் 30 ஆயிரம் பேரும், விடுமுறை நாட்களில் 45 ஆயிரம் பேரும் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு மலைவழியில் பாத யாத்திரையாக திவ்ய தரிசனத்திற்காக நடந்து செல்கின்றனர். கூட்ட நெரிசலால், தரிசனத்திற்கு 10 மணி நேரம் வரை அவர்கள் காத்திருக்க வேண்டிய நிலை உருவானதால் கடந்த 17 ஆம் தேதி முதல் திங்கள், செவ்வாய், புதன், வியாழக்கிழமை ஆகிய நாட்களில் பாத யாத்திரை வரும் பக்தர்களுக்கு 20 ஆயிரம் டோக்கன்கள் மட்டும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அலிபிரியில் 15 ஆயிரம் டோக்கன்களும், ஸ்ரீவாரிமெட்டில் 5 ஆயிரம் டோக்கன்களும் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. அதன்பின் வரும் பக்தர்கள் பொது தரிசனத்திலேயே செல்ல வேண்டும் என திருமலை தேவஸ்தானம் அறிவித்தது.

இந்நிலையில் இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வார இறுதி நாட்களிலும் திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close