[X] Close
JUST IN
 • BREAKING-NEWS திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளார்: கனிமொழி எம்.பி
 • BREAKING-NEWS வைகோவுக்கு பாதுகாப்பு தர ஐ.நா சார்பில் 2 அதிகாரிகள் நியமனம்
 • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் தொடர்பாக அனைவரும் அமைதி காக்க வேண்டும்: மைத்ரேயன் எம்.பி
 • BREAKING-NEWS கமலை பாஜகவில் இணைக்கலாமா என்பதை தலைமைதான் முடிவு செய்ய வேண்டும்: எஸ்.வி.சேகர்
 • BREAKING-NEWS தமிழகத்தில் கல்வி புரட்சி செய்தவர் காமராஜர்: மாஃபா பாண்டியராஜன்
 • BREAKING-NEWS திண்டுக்கல் மாவட்டத்தில் ஜிகா வைரஸ் இருப்பதை அரசு கண்டுபிடித்துள்ளது: அமைச்சர் விஜயாஸ்கர்
 • BREAKING-NEWS கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்: தமிமுன் அன்சாரி
 • BREAKING-NEWS தமிழகத்தில் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
 • BREAKING-NEWS அப்போலோவில் ஜெயலலிதா இருந்தபோது நான் அவரை பார்க்கவில்லை: வெற்றிவேல்
 • BREAKING-NEWS சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் கல்லீரல் சிகிச்சை பிரிவில் மின்கசிவால் தீ விபத்து
 • BREAKING-NEWS விமானப் பயணத்திற்கு இனி அடையாள அட்டை தேவையில்லை..!
 • BREAKING-NEWS திருவள்ளூர் ஆட்சியர், தமிழக வருவாய் துறை செயலாளருக்கு இந்த மாத சம்பளம் வழங்க தடை
 • BREAKING-NEWS குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாநிலம் என்ற இலக்கை நோக்கி அரசு செல்கிறது: நிலோபர் கபில்
 • BREAKING-NEWS கிரிக்கெட் போட்டிகளில் புதிய விதிமுறைகள் செப்.28 க்கு பிறகு அமலுக்கு வரும் என ஐசிசி அறிவிப்பு
இந்தியா 17 Jul, 2017 08:55 PM

குடியரசுத் தலைவர் தேர்தல் 99% வாக்குப்பதிவு

99-polling-in-presidential-election

 

இன்று நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் நாடு முழுவதும் உள்ள எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் வாக்களித்தனர். வாக்குரிமை உள்ளவர்களில் 99 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

டெல்லியில் நாடாளுமன்ற செயலகத்தில் அமைக்கப்பட்ட வாக்குப்பதிவு மையத்தில் பிரதமர் நரேந்திர மோடி, தனது வாக்கை செலுத்தினார். அவருடன் வந்த பாஜக தலைவரான அமித்ஷாவும் தனது வாக்கை பதிவு செய்தார். இதையடுத்து மத்திய அமைச்சர்கள், தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் பலரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்கை செலுத்தினர். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மற்றும் துணைத்தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் நாடாளுமன்றத்தில் தங்கள் வாக்கை பதிவு செய்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா, மாயாவதி உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களும் குடியரசுத் தலைவர் தேர்தலில் தங்கள் வாக்குகளை பதிவு செய்த‌னர்.

தமிழகத்தில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை தொடங்கியபோது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்கை பதிவு செய்தனர். மத்திய இணையமைச்சரும் கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யுமான பொன் ராதாகிருஷ்ணன் வாக்கு செலுத்தினார். இதையடுத்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களித்தனர். உடல்நலக்குறைவு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி வாக்களிக்க வரவில்லை. ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருக்கும் நிலையில், மொத்தம் 232 எம்.எல்.ஏ.க்கள் சென்னையில் வாக்களித்தனர்.

புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 எம்எல்ஏக்களும் வாக்களித்ததையடுத்து இரண்டரை மணிநேரத்தில் வாக்குப்பதிவு முடிந்தது. குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்ற நிலையில், டெல்லியில் குடியரசுத் தலைவர் பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கான ஒத்திகை நடந்தது. விஜய் சவுக் பகுதியில் வீரர்கள் குதிரையில் அணிவகுத்து சென்று ஒத்திகையில் ஈடுபட்டனர்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close