[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

சமாஜ்வாதி கட்சியில் இருந்து அகிலேஷ் இடைநீக்கம்: முலாயம் சிங்

mulayam-singh-yadav-expels-son-akhilesh-yadav-for-six-years

சமாஜ்வாதி கட்சியில் இருந்து உத்தரப்பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் 6 ஆண்டுகளுக்கு நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக அக்கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் அறிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்காக சமாஜ்வாதி கட்சி அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருந்தது. அந்த வேட்பாளர் பட்டியலில் அதிருப்தி அடைந்த அகிலேஷ் யாதவ் போட்டி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இந்நிலையில் லக்னோவில் செய்தியாளர்களைச் சந்தித்த கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் அகிலேஷ்யாதவை 6 ஆண்டுகளுக்கு இடை நீக்கம் செய்துள்ளதாக அறிவித்தார்.

அகிலேஷ் யாதவின் ஆதரவாளர் ராம் கோபல் யாதவையும் அவர் இடை நீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளார். சமாஜ்வாதி கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்திற்கு கட்சி தலைவர் அனுமதி இல்லாமல் ராம்கோபால் அழைப்பு விடுத்து இருந்தார். இது கட்சி விரோத நடவடிக்கை என முலாயம் விமர்சித்துள்ளார். இதனிடையே தங்களிடம் விளக்கம் கேட்காமல் கட்சியை விட்டு நீக்கியது சட்டவிரோதம் என ராம்கோபால் யாதவ் தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close