[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

இந்திய மீனவர்கள் 220 பேரை விடுவித்தது பாகிஸ்தான்

goodwill-gesture-pakistan-frees-220-indian-fishermen

பாகிஸ்தான் சிறைகளில் வாடும் இந்திய மீனவர்கள் 220 பேரை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்வதாக அந்நாடு அறிவித்துள்ளது.

அரபிக்கடலில் எல்லைகள் சரியாக வரையறுக்கப்படாத நிலயில் எல்லைதாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இந்திய மீனவர்களை பாகிஸ்தானும், பாகிஸ்தான் மீனவர்களை இந்தியாவும் கைது செய்வது வாடிக்கையாக நிகழும் செயலாகிவிட்டது. மேலும், ஜிபிஎஸ் உள்ளிட்ட தொழில்நுட்பக் கருவிகள் இல்லாததால் மீனவர்களுக்கு சிக்கல் ஏற்படுகிறது. அவ்வாறு கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் இருநாடுகளின் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், நல்லெண்ண அடிப்படையில் இந்திய மீனவர்கள் 220 பேர் விடுவிக்கப்படுவதாக பாகிஸ்தானின் கராச்சி சிறையின் துணைக் கண்காணிப்பாளர் ஹஸன் சேடோ தெரிவித்துள்ளார். விடுவிக்கப்பட்ட மீனவர்கள் இந்திய எல்லையை நாளை வந்தடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எல்லைதாண்டி மீன்பிடித்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்ட மேலும் 219 இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close