[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

ராகுல் பேசினால் சிரிப்புதான் வரும், பூகம்பம் வராது: மோடி

modi-answered-to-rahul-gandhi-s-criticism

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசினால் பூகம்பம் வராது, சிரிப்புதான் வரும் என்று, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் இ.எஸ்.ஐ மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது, ராகுல் காந்தியின் விமர்சனத்துக்கு பதில் அளிக்கும் வகையில் மோடி பேசினார். ராகுல் காந்தி என்ன பேசுவதென்று தெரியாமல் பேசுவதாகவும், இப்போதுதான் அவர் பேசக் கற்றுக் கொண்டிருப்பதாகவும் பிரதமர் விமர்சித்தார்.

நாடாளுமன்றத்தில் பேசினால் பூகம்பம் வரும் என்று ராகுல் கூறுவது குறித்து கருத்து தெரிவித்த மோடி, அவர் சொல்வது போல் ஒன்றும் வராது, சிரிப்புதான் வரும் என்று விமர்சித்தார்.

ஊழல், கறுப்புப் பணம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில், புதிய ரூபாய் நோட்டு கொள்கை கொண்டுவரப்பட்டதாகவும், ஆனால், எதிர்க்கட்சிகள் எல்லாம் இதற்கு எதிராக ஒன்று சேர்ந்திருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close