[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது

500 ரூபாய் நோட்டின் விலை ரூ.3.09, 2,000 ரூபாய் நோட்டின் விலை ரூ.3.54

rbi-pays-rs-3-09-for-rs-500-note-and-rs-3-54-for-a-rs-2-000-note

500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சிட ஆகும் செலவு எவ்வளவு என்பது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு ரிசர்வ் வங்கி பதிலளித்துள்ளது.

பணம் மதிப்பிழப்பு விவகாரத்தைத் தொடர்ந்து புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு புழக்கத்தில் விட்டது. புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ஆகும் செலவு குறித்து தகவலறியும் உரிமைச் சட்டம் மூலம் மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நீமுச் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கிக்குக் கேள்வி எழுப்பியிருந்தார். சந்திரசேகரின் கேள்விக்கு ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பாரதிய ரிசர்வ் வங்கி நோட் முத்ரான் பிரைவேட் லிமிடட் நிறுவனம் (பிஆர்பிஎன்எம்பிஎல்) நிறுவனம் பதில் அளித்துள்ளது. அதன்படி புதிய 500 ரூபாய் தாள் ஒன்றினை அச்சிட ரூ.3.09 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சிட ரூ.3.54 செலவாகிறது என்று பதிலளித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close