[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி

பிரதமர் மோடி ஊழலில் ஈடுபட்டதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது... ராகுல் காந்தி

i-have-information-on-pm-s-corruption-he-s-terrified-rahul-gandhi

பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் முறைகேட்டில் ஈடுபட்டதற்கான தனிப்பட்ட தகவல்கள் தம்மிடம் உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பண மதிப்பிழப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளி ஏற்பட்டு வருகிறது. பிரதமர் மோடி இந்த விவகாரம் குறித்து விளக்கமளிக்க வேண்டும் என தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. பண மதிப்பிழப்பு விவகாரம் குறித்து விவாதத்திற்கு தயாராக இருப்பதாகவும் ஆனால் எதிர்க்கட்சிகள்தான் அவையை நடத்த விடாமல் இடையூறு செய்து வருகின்றன எனவும் ஆளும் பாஜக குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கேரள ஐக்கிய ஜனநாயக முன்னணியினர் நடத்திய போராட்டம் ஒன்றில் பங்கேற்க ராகுல் காந்தி வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் முறைகேட்டில் ஈடுபட்டதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. இதனால் மோடி அச்சத்தில் உறைந்துள்ளார். இந்த காரணத்திற்காகவே நாடாளுமன்றத்தில் பேச எனக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்று தெரிவித்தார். இதுகுறித்து நாட்டு மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் பிரதமர் மோடிக்கு இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close