[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்
  • BREAKING-NEWS விண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்

பலாத்காரம் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கும் இழப்பீடு கோரும் உரிமை உண்டு..டெல்லி உயர்நீதிமன்றம்

rape-case-victims-child-gets-compensation

டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் மூலம் பிறந்த குழந்தைக்கு, அக்குற்றத்திற்கு உரியவர் இழப்பிடு வழங்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

டெல்லியில் கார் ஓட்டுனராக பணிபுரியும் ஒருவர், தனது மனைவிக்கு முதல் திருமணத்தின் மூலம் பிறந்த 14 வயது பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அப்பெண்ணுக்கு கடந்த 2014ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து தொடரப்பட்ட வழக்கில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண்ணுக்கு ரூ.15 லட்சம் இழப்பிடு வழங்க வேண்டும் என்று கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதுதொடர்பான வழக்கில் தண்டனை பெற்றவர் தொடுத்த மேல்முறையீட்டு மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் கீதா மித்தல், ஆர்.கே.கௌபா ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண்ணுக்கு வழங்கும் ரூ.15 லட்சம் இழப்பீடு தொகை, டெல்லி மாநில அரசு கடந்த 2011-ஆம் ஆண்டு வகுத்த திட்டத்துக்கு எதிரானது என்று கூறி இழப்பிடு தொகையை 7.5 லட்சமாக  குறைத்து உத்தரவிட்டனர். அதேநேரத்தில் பாதிக்கப்பட்ட பெண் மூலம் பிறந்த குழந்தைக்கு ரூ.12 லட்சம் இழப்பிடு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் உத்தரவிட்டனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close