[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கொள்ளை வழக்கில் மேலும் 6 கிலோ நகை சிக்கியது
  • BREAKING-NEWS அயோத்தியில் டிசம்பர் 10-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு

ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு வழக்கு....முன்னாள் விமானப்படைத் தளபதி கைது

arrested-a-former-air-force-commander-of-the-helicopter-contract-scam

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு வழக்கில் முன்னாள் விமானப் படை தளபதி எஸ்.பி. தியாகியை சி.பி.ஐ டெல்லியில் கைது செய்தது.

தியாகியின் சகோதரர் சஞ்சீவ் மற்றும் வழக்கறிஞர் கவுதம் கைதான் ஆகியோரையும் சி.பி.ஐ கைது செய்தது. இந்தியாவில் அதிமுக்கியப் பதவிகளில் இருப்போருக்காக இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து, 3600 கோடி ரூபாய் மதிப்பில் 12 ஹெலிகாப்டர்களை வாங்குவதற்காக முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில் ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்ததையடுத்து, இந்த வழக்கை சி.பி.ஐ விசாரித்து வருகிறது.

இதில், முன்னாள் விமானப் படைத் தளபதி எஸ்.பி.தியாகி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் ஊழல் வழக்கு ஒன்றிற்காக விமானப் படைத் தளபதியாக பதவி வகித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது இதுவே முதன் முறையாகும். எஸ்.பி.தியாகி, 2007ஆம் தேதி விமானப் படையில் இருந்து ஓய்வு பெற்றார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close