[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

பேச அனுமதி தந்தால் பூகம்பமே உண்டாகும்: ராகுல்காந்தி

rahul-gandhi-warns-of-earthquake-if-he-speaks-on-demonetisation-in-parliament

பண மதிப்பிழப்பு விவகாரம் குறித்த விவாதத்திலிருந்து அரசு தப்பித்து ஓடுவதாகவும் ஒருவேளை இதுகுறித்து விவாதிக்க தங்களுக்கு அனுமதி தந்தால் பூகம்பமே உண்டாகும் எனவும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த மாதம் 16-ஆம் தேதி தொடங்கியது. அன்றிலிருந்தே ரூபாய் நோட்டு விவகாரத்தை எழுப்பி வரும் எதிர்க்கட்சிகள், இவ்விவகாரத்தில் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும். பிரதமர் மோடி எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஒவ்வொரு கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, பண மதிப்பிழப்பு விவகாரத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது எனவும் ஆனால் தன்னை இதுகுறித்து சொல்ல விடாமல் தடுப்பதாகவும் குற்றஞ்சாட்டினார். ஒருவேளை இதுகுறித்து விவாதிக்க தங்களுக்கு அனுமதி தந்தால் பூகம்பமே உண்டாகும் எனவும் ராகுல்காந்தி கூறினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close