[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

ஐதராபாத்தில் 7 மாடி கட்டடம் இடிந்து விபத்து... 2 பேர் உயிரிழப்பு

2-dead-many-feared-trapped-after-6-storey-building-collapses-in-hyderabad

ஐதராபாத்தில் 7 மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 10 முதல் 12 பேர் கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

ஐதராபாத் நகரில், நானக்ராம்குடா என்ற பகுதியிலுள்ள 7 அடுக்குமாடிக் கட்டடம் ஒன்று நேற்று இரவு திடீரென இடிந்து விழுந்தது. இதில் அங்கு வசித்து வந்தவர்களில் பலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்புப் படையினர், பொக்லைன்கள் உதவியுடன் விடிய விடிய மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 10 முதல் 12 பேர் கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இதனிடையே, இடிபாடுகளில் சிக்கியவர்களை மோப்ப நாய்கள் மற்றும் நவீன ஒலி உணர் கருவிகள் மூலமாக கண்டறியவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close