[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS திருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது!
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்
  • BREAKING-NEWS “மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை
  • BREAKING-NEWS நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு

புதிய 1,000 ரூபாய் நோட்டுகள் எப்போது?

as-of-now-no-decision-on-new-1-000-rupee-note-says-rbi

புதிய ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வெளியிடுவது குறித்து ரிசர்வ் வங்கி விளக்கமளித்துள்ளது.

மத்திய அரசின் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து, புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது. அதேநேரம் புதிய 1,000 ரூபாய் நோட்டுகளை வெளியிடுவது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் இன்று மும்பையில் நிதிக்கொள்கை தொடர்பாக நடைபெற்ற கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் ஆர். காந்தி, புதிய 1,000 ரூபாய் நோட்டுகளை வெளியிடுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று விளக்கமளித்தார். ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில் 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் காந்தி தெரிவித்தார். முன்னதாக, சில்லறைத் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் 20, 50 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close