[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாஸ் வென்றது வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா முதல் பேட்டிங்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

ஏடிஎம்-மில் பணம் இல்லை.. புது மாப்பிள்ளைக்காக நிதி திரட்டிய கிராம மக்கள்..!

villagers-arrange-rs-20-000-for-groom-as-atm-ran-dry

திருமண கோலத்தில் ஏடிஎம் வாசலில் நின்ற மணமகனுக்கு பணம் கிடைக்காமல் போக, கிராம மக்கள் ஒன்று சேர்ந்து ரூ.20,000 பணத்தை திரட்டி கொடுத்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மாரை சேர்ந்தவர் ராஜு. புது மாப்பிள்ளையான இவர் திருமண ஊர்வலத்திற்காக வெளியே வரும் போது தான் மாமியார் வீட்டிற்கு சென்றால் பணம் தேவைப்படும் என்ற நியாபகம் வந்துள்ளது. உடனடியாக திருமண கோலத்திலே அங்குள்ள ஏடிஎம்-மிற்கு சென்றுள்ளார். வரிசையில் நின்றவர்கள் ஒவ்வொருவராக பணம் எடுக்க, மாப்பிள்ளையான ராஜு-வின் வாய்ப்பு வரும் போது ஏடிஎம்-மில் பணம் இல்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த ராஜு சிறிது சோகம் அடைந்தார். எனவே கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ரூ.20,000 பணத்தை திரட்டி அதனை புது மாப்பிள்ளையிடம் கொடுத்துள்ளனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த ராஜு, பின்னர் மணமகன் ஊர்வலத்தை தொடங்கியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close