[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்
  • BREAKING-NEWS நீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு

டிக்கெட் கவுண்டர்களிலும் இனி கார்டுகள் மூலம் ரயில் டிக்கெட்..?

railways-gives-green-light-to-go-cashles

ரயில்வே டிக்கெட் கவுண்டர்களில் கிரிடிட், டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி டிக்கெட் பெறும் வசதியைக் கொண்டு வர ரயில்வே திட்டமிட்டுள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள சுமார் 12,000 ரயில்வே டிக்கெட் கவுண்டர்களில் தற்போது ரொக்கமாக பணம் செலுத்தி தான் டிக்கெட் பெற முடியும். இந்நிலையில், ரயில் டிக்கெட் கவுண்டர்களில் கார்டுகளை பயன்படுத்தி டிக்கெட் பெறும் வசதியை கொண்டு வர ரயில்வே திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கு தேவையான ஸ்வைப் மெஷின்களை வழங்குமாறு, எஸ்.பி.ஐ., ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிகளை ரயில்வே கோரியுள்ளது.

முதல்கட்டமாக இந்தாண்டு இறுதிக்குள் 1000 ஸ்வைப் மெஷின்களும், அடுத்த கட்டமாக 15,000 ஸ்வைப் மெஷின்களும் பெற்று பயன்பாட்டிற்கு கொண்டுவர ரயில்வே திட்டமிட்டுள்ளது. மேலும், ரயில்வே டெண்டர்களுக்கான பணப்பரிவர்த்தனையையும் இணையத்தின் வழியே நடத்தவும் ரயில்வே திட்டமிட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாடெங்கும் உள்ள மக்கள் மின்னணு பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ளுமாறு பிரதமர் மோடி தொடர்ச்சியாக கேட்டுக்கொள்ளும் நிலையில் ரயில்வே இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close