[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

ஐஏஎஸ் அதிகாரிகளாக இருந்தும் ரூ.500 செலவில் திருமணம் செய்த எளிமையான காதலர்கள்

ias-couple-gets-married-in-rs-500-sets-example-for-others

நாடு முழுவதிலும் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு திரும்பப் பெற்றதையடுத்து சில்லறை தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக வெறும் 500 ரூபாய் செலவில் ஐஏஎஸ் காதல் ஜோடி திருமணத்தை நடத்தி முடித்துள்ளனர்.

கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றவர், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஆசிஷ் வசிஷ்டா மற்றும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த முசோரி. இவர்கள் இருவரும் ஐஏஎஸ் தேர்விற்காக பயிற்சி பெற்ற சமயத்தில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. தற்போது இருவர் வீட்டாரின் ஒத்துழைப்பு கிடைதத்தை அடுத்து திருமணத்தை நடத்த முன்வந்துள்ளனர்.

ஆனால் நாடெங்கும் சில்லறை தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் வெறும் 500 ரூபாய் செலவில் தங்களது திருமணத்தை எளிமையான முறையில் நடத்தி மற்றவர்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்துள்ளனர். அதுவும் 500 ரூபாய் செலவு என்னவென்றால், திருமண கட்டணமாக நீதிமன்றத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணம் தான். வேறு எந்த செலவையும் அவர்கள் செய்யவில்லை. மணமக்களை உற்றார் உறவினர்கள் மனதார வாழ்த்தி வருகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close