[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழுவின் ஆய்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடிதம்
  • BREAKING-NEWS பாஜக அரசால்தான் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் - அமித்ஷா
  • BREAKING-NEWS சுதந்திர இந்தியாவில் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்வு
  • BREAKING-NEWS புழல் சிறையில் வார்டன்கள் அதிரடி இடமாற்றம்

ஹெலிக்காப்டர் மூலம் புதிய ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் சுடச்சுட டெலிவரி..!

new-currency-notes-distributed-by-helicopter

புதிய 500,2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு ஹெலிக்காப்டர் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்திய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படும் இடத்தில் இருந்து வங்கிகளுக்குப் பணத்தைப் பிரித்துக் கொடுக்கப்படும் பகிர்மான மையத்துக்கு பணம் வந்து சேர பொதுவாக 21 நாட்கள் ஆகும். ஆனால் சந்தையில் ரூபாய் நோட்டுகள் குறைந்து கடும் தட்டுப்பாடு நிலவி வருவதால் மத்திய அரசு புதிய ரூ.500,2000 நோட்டுகளை ஹெலிக்காப்டர் மூலம் துரித நேரத்தில் வங்கிகளுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. இதனால் புதிய ரூபாய் நோட்டுகள் 6 நாட்களுக்குள் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. ராணுவ விமானம் மற்றும் ஹெலிக்காப்டர் உதவியுடன் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்து வருகிறது.

அடுத்த வரத்திற்குள் 6 நாட்கள் என்பது மேலும் குறைய வாய்ப்புள்ளதாகவும் கிராமம் மற்றும் சிறு நகரங்களுக்கு அதிகளவிலான பணத்தைக் கொண்டு சேர்க்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வங்கிகளில் தற்போது பணத் தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில் மக்களின் பணத் தேவையைக் குறைக்க மத்திய அரசு தற்போது அனைத்து விதமான போக்குவரத்துகளையும் பயன்படுத்தி வருகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close