[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை
  • BREAKING-NEWS மாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா
  • BREAKING-NEWS காஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா

ரூபாய் நோட்டு விவகாரம்...அரசின் முடிவை அமல்படுத்த தூக்கம் தொலைத்த வங்கி அதிகாரிகள்

amid-cash-crunch-sleepless-bank-employees-fulfil-government-s-promises

ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசின் முடிவால் வங்கி ஊழியர்கள் கடந்த 10 நாட்களாக விடுமுறையின்றி பணியில் ஈடுபட்டனர்.

கடந்த 10ம் தேதி முதல் கூடுதல் வேலைநேரம் உழைத்த வங்கி ஊழியர்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரசின் பொருளாதார ரீதியான இந்த நடவடிக்கையால், காலை 9 மணிக்கு அலுவலகத்துக்கு வரும் வங்கி ஊழியர்களின் பணி சிலநாட்களில் நள்ளிரவு 1 மணி வரை நீண்டது என்பதே களநிலவரம். மக்கள் வெள்ளம் ஒருபுறம், கூடுதல் வேலைநேரம் மறுபுறம் என அவர்களுக்கு கடந்த 10 நாட்களாக பணிச்சூழல் சற்று கடினமாகவே கடந்தது. கூடுதல் பணிச்சுமை காரணமாக கான்பூர் பாரத ஸ்டேட் வங்கி ஊழியர் ராம்பான்டுலே வெங்கடேஷ் ராஜேஷ் எனும் ஊழியர் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக உயிரிழந்தார். அதேபோல, குஜராத் மாநிலம் அகமதாபாத் பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காசாளராகப் பணிபுரியும் 45 வயதான வர்ஷா எனும் பெண் ஊழியர் மயங்கி சரிந்தார். வாடிக்கையாளர் கொடுத்த ரூபாய் நோட்டுகளை எண்ணும்போது அவர் மயங்கி சரிவது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தினசரி 17 மணிநேரத்துக்கு மேலான பணிச்சுமை காரணமாக அவருக்கு மனஅழுத்தம் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவருக்கு அகமதாபாத் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வங்கி ஊழியர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்த கணத்தின் அவசரத் தேவையாகும்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close