[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

உ.பி., ரயில் விபத்து - தகவல் அறிய சிறப்பு எண்கள் அறிவிப்பு

up-train-accident-info-special-numbers

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் பற்றிய விவரம் அறிய சிறப்பு எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

உத்தரபிரதேச மாநிலத்தில் பாட்னா - இந்தூர் விரைவு ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 90 பேர் உயிரிழந்தனர். 150 பேர் காயம் அடைந்து உள்ளனர்.

ரயில் விபத்து நடந்த இடத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் முழுவீச்சில் நடந்துவருகின்றன. காயமடைந்த பயணிகள் சிறப்பு ரயில் மற்றும் சிறப்பு பேருந்துகள் மூலம் மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர். பயணிகளுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டதாக வட மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்கள் பற்றிய விவரம் அறிய 10 சிறப்பு எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி பொதுமக்கள், இந்தூர் - 0741 1072, உஜ்ஜைன் - 0734 2560906, ராட்லம் - 07412 1072, ஒராய் - 05162 1072, ஜான்சி- 0510 1072, போக்ராயா - 05113270239 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்களை அறியலாம் என ரயில்வே தெரிவித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close