[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

கருப்புப் பணம்தான் பொருளாதார நெருக்கடியிலிருந்து இந்தியாவை காப்பாற்றியது: அகிலேஷ்

black-money-helped-indian-economy-during-global-recession-akhilesh-yadav

சர்வதே அளவில் பொருளாதார நெருக்கடியில் ஏற்பட்டபோது இந்தியப் பொருளாதாரத்தை காப்பற்றியது கருப்புப் பணம்தான் என்று உத்திரப்பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

லக்னோவில் நேற்று நடைபெற்ற கார் ரேஸ் நிகழ்ச்சியொன்றின் தொடக்க விழாவில் அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,

கருப்புப் பணம் பதுக்குவதை நான் கடுமையாக எதிர்க்கிறேன். அதை நான் ஒருபோதும் ஆதரிக்கவில்லை. எனினும் சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, இந்தியப் பொருளாதாரம் பாதிப்படையாமல் இருந்ததற்கு கருப்புப் பணப் பொருளாதாரம்தான் கைகொடுத்ததாக வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

500, 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்து, ஏழை எளிய மக்களை மத்திய அரசு கடும் துன்பத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது. பொதுமக்களைத் துன்புறுத்திய எந்தவொரு அரசையும் மக்கள் ஆட்சியில் விட்டு வைத்ததில்லை என்றார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close