[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்கு
  • BREAKING-NEWS ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது தடியடி- டெல்லியில் விடியவிடிய போராட்டம்
  • BREAKING-NEWS 'இலங்கைத் தமிழர்களை ஏன் ஒதுக்கினீர்கள்' - ப.சிதம்பரம் கேள்வி
  • BREAKING-NEWS ஏ.எம்.யூ. மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை: ஜன. 5 வரை கல்லூரி மூடல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 77.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.81 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னையில் இருந்து டெல்லி செல்லும் முதலமைச்சர் பழனிசாமி டிச. 19ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கிறார்

ரூபாய் நோட்டு விவகாரம்... பிரதமரைப் பாராட்டும் சினிமா பிரபலங்கள்

celebrities-hail-demonetization-and-pm-modi

கருப்புப்பண ஒழிப்பு நடவடிக்கையாக 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி அறிவித்தார். இந்த முடிவுக்கு நாடு முழுவதும் கலவையான விமர்சனங்கள் வந்தாலும், பாலிவுட் மற்றும் தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

ரஜினி:

’பிரதமர் நரேந்திர மோடியின் செயலுக்கு தலை வணங்குகிறேன். புதிய இந்தியா பிறந்துள்ளது. ஜெய்ஹிந்த்’ என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கமல்ஹாசன்:

500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை அனைத்து அரசியல் கட்சிகளும் கொண்டாட வேண்டும். மிக முக்கியமாக ஏற்கனவே முறையாக வரிசெலுத்துபவர்களும் இதனை கொண்டாட வேண்டும் என கமல்ஹாசன் ட்விட்டர் மூலம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய்:

கருப்புப் பணத்தை மீட்பதற்கான பிரதமர் மோடியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்றாலும், மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். சில பணக்காரர்கள் செய்யும் தவறுக்காக 80 சதவீத மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமிதாப் பச்சன்:

புதிய 2 ஆயிரம் நோட்டுகள் பிங்க் நிறத்தில் உள்ளதாக, தனது பிங்க் படத்தைக் குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஷாருக்கான்:

அரசியல் நோக்கில்லாமல் தொலைநோக்குப் பார்வையுடன் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, இந்திய பொருளாதாரத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

ஐஸ்வர்யா ராய்:

இந்திய குடிமகளாக என்னுடைய வாழ்த்துக்களை பிரதமர் மோடிக்கு தெரிவித்துக்கொள்கிறேன். நமது நாட்டில் நிலவிவரும் ஊழலுக்கு எதிராக வலிமையான நடவடிக்கையை எடுத்துள்ளீர்கள். மாற்றங்கள் எப்போதும் சவுகரியமாக இருக்காது. மாற்றத்தை விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டால் அது மிகப்பெரிய பலனை கொடுக்கும்

தனுஷ்:

வரலாற்றுச் சிறப்புமிக்க அற்புதமான நடவடிக்கைக்கு மரியாதை கொடுப்பதாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

த்ரிஷா:

ஊழலற்ற இந்தியாவை உருவாக்கும் விதத்தில் எடுக்கப்பட்ட துணிச்சலான நடவடிக்கைக்கு தலைவணங்குவதாய் கருத்து தெரிவித்துள்ளார்.

அதேநேரம், பிரதமர் மோடியின் நடவடிக்கையை புரட்சி என பேசும் நடிகர் ரஜினி, தனது கபாலி பட வருமானம் குறித்து கணக்கு காட்ட முடியுமா என்று இயக்குனர் அமீர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் எந்த பிரச்னைக்கும் குரல் கொடுக்காத அவர் இதற்கு வரவேற்பு அளித்தது ஏன் என்றும் அமீர் வினவியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close