[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அமெரிக்காவின் வால்மார்ட் உள்பட இருவேறு இடங்களில் துப்பாக்கிச்சூடு: 7 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது: அமைச்சர் கடம்பூர் ராஜு
  • BREAKING-NEWS ரஜினியின் அரசியல் பிரவேசம் காலம் கடந்தது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து

இனி ஆண்டுதோறும் பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்: மத்திய அரசு அறிவிப்பு

budget-session-of-parliament-2017

நாடாளுமன்றத்தில் இனி ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நவம்பர் 3-வது அல்லது 4-வது வாரத்தில் தொடங்குவது வழக்கம். ஆனால் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமல்படுத்த ஏதுவாக,வரும் 16-ம் தேதியே (நாளையே ) கூட்டத்தொடர் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரில் மேலும் 15 புதிய மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

இந்நிலையில் பிப்ரவரி கடைசி வாரத்தில் பட்ஜெட் கூடுவது வழக்கம். ஆனால் வரும் ஆண்டு முதல் பட்ஜெட் கூட்டத் தொடரை ஒரு மாதம் முன்னதாக, அதாவது ஜனவரி இறுதியில் கூட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதேபோல் பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஏற்கனவே அறிவித்தபடி, அன்றைக்கு யில்வே பட்ஜெட்டுடன் சேர்த்து பொதுபட்ஜெட் முதன்முறையாக தாக்கல் செய்யப்படவிருக்கிறது.

இந்நிலையில் ஆங்கிலேயே ஆட்சியில் இருந்து மாலையில் தாக்கல் செய்யப்பட்டு வந்த மத்திய பட்ஜெடை, 16 ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.க அரசு காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும் முறையை கொண்டுவந்தது. அதே போன்று இப்போதும் மீண்டும் ஒரு மிகமுக்கியமான மாற்றத்தை தற்போதைய பாஜக அரசு கொண்டுவந்துள்ளது அதன்படி இனி பிப்ரவரி 28ம் தேதிக்கு பதில் பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதனால், பட்ஜெட்டிற்கு, புதிய நிதியாண்டு தொடங்குவதற்கு முன்னரே, நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற முடியும். மேலும், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துவது சீரான தன்மையைக் கொண்டுவர முடியும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நாளை தொடங்கும் குளிர்காலக் கூட்டத்தொடர் மற்றும் ஜனவரியில் தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி அரசுக்கு கடும் நெருக்கடி கொடுக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. குறிப்பாக புழக்கத்தில் உள்ள 500, 1,000 ரூபாய் நோட்டு களைத் திரும்பப் பெற்றது, மும்முறை தலாக் ஆகிய விவகாரங்கள் நாளை தொடங்கும் குளிர்காலக் கூட்டத்தொடரில் புயலை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close