[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

’தூக்க மாத்திரைக்காக ஓடும் பணக்காரர்கள்’... பிரதமர் மோடி பேச்சு

my-decision-is-a-little-karak-like-my-chai-pm-modi-says-in-up-rally

500 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை செல்லாததாக்கும் அரசின் முடிவால் பணக்காரர்கள் தூக்கமிழந்து தவிப்பதாகவும் தூக்க மாத்திரைக்காக ஓடுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். எனது முடிவுகள் அனைத்தும், தான் தயாரிக்கும் தேநீரைப் போலவே கொஞ்சம் ஸ்டாராங்காகவே இருக்கும் என்றும் அவர் பேசினார்.

உத்தரப்பிரதேச மாநிலம் காஸிப்பூர் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தனது சிறுவயதில் ரயில்நிலையங்களில் தேநீர் விற்ற நாட்களை நினைவுகூர்ந்தார். அந்த நாட்களில் தான் தயாரிக்கும் தேநீரைப் போலவே தனது முடிவுகளும் கொஞ்சம் ஸ்ட்ராங்காக இருக்கும் என்று பேசினார். 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாததாக அறிவித்த முடிவு சட்டவிரோதமாக கருப்புப் பணத்தை வைத்திருப்பவர்களைக் குறிவைத்தே எடுக்கப்பட்ட முடிவு என்றும் அவர் குறிப்பிட்டார். அரசின் இந்த முடிவால் பணக்காரர்கள் தூக்கமிழந்து தவிப்பதாகவும், தூக்க மாத்திரைக்காக ஓடுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அதே சமயம் ஏழைகள் நிம்மதியாக உறங்கத் தொடங்கியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். ‌நாட்டில் ஊழலை ஒழிக்க வேண்டுமென்றால், மக்கள் சில சிரமங்களை பொறுத்துக்கொள்ளத் தயாராக வேண்டும் எ‌ன்றும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். வீட்டை தூய்மைப்படுத்த சுண்ணாம்பு பூசும் போது சகித்துக்கொள்ள முடியாத நாற்றம் வீசத்தான் செய்யும் என்றும் அதை ஏற்கத்தான் வேண்டும்‌ என்றும் மோடி பேசினார். அரசின் அதிரடி அறிவிப்பால் என்ன செய்வது என்று தெரியாமல் எதிர்க்கட்சிகள் திகைத்துப் போயுள்ளதாகவும் இதன் காரணமாகவே குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close