[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

’ரூபாயைத் தொடர்ந்து உப்புக்கும் தட்டுப்பாடு’... வடமாநிலங்களில் பரவிய வதந்தி

do-not-panic-plenty-of-edible-salt-stocks-are-available-in-north

ரூபாய் நோட்டுகளைத் தொடர்ந்து வடமாநிலங்களில் உப்புக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டதாக எழுந்த வதந்தியை அடுத்து கிலோ ரூ.200-க்கு மேல் விற்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால் பல்வேறு தரப்பினரும் அவதிப்பட்டு வரும் சூழலில், வடஇந்தியாவில், குறிப்பாக உத்தரப்பிரதேசம், ஹரியானா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் உப்புக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.இதையடுத்து அந்த பகுதிகளில் உப்பு வாங்க கடும்போட்டி ஏற்பட்டது. உ.பி.யின் மொராதாபாத்தில் ஒரு கிலோ உப்பு ரூ.200-க்கு விற்கப்பட்டதாக புகார் எழுந்தது. மேலும், அங்குள்ள சந்தை ஒன்றில் உப்பு மூட்டைகள் திருடப்பட்டதாகவும் தெரிகிறது.

இந்தநிலையில், உப்பு தட்டுப்பாடு குறித்து வெளிவந்த தகவல்கள் வதந்தி என்றும், போதிய உப்பு கையிருப்பு இருப்பதாகவும் உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். உப்பு குறித்து வதந்தி பரப்புவோர் குறித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரித்துள்ள வடக்கு டெல்லி காவல் ஆணையர், இதுதொடர்பான புகார்களை மக்கள் அவசரத் தொலைபேசி எண்ணான 100-க்கு தொடர்புகொண்டு அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close