[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS வரும் 17-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 25-ஆம் தேதி வெளியீடு: நவம்பர் 18-ஆம் தேதி வரை திருத்தங்கள் செய்யலாம்
  • BREAKING-NEWS ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு

செல்லாத நோட்டு அறிவிப்பு... அதிர்ச்சியில் மயங்கிவிழுந்து உயிரிழந்த பெண்

stunned-over-new-rs-1-000-rule-woman-dies-of-shock-outside-bank-in-gorakhpur

ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகள் ஏற்காத அதிர்ச்சியில் 40 வயதான பெண் ஒருவர் வங்கி வாயிலிலேயே அதிர்ச்சியில் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது.

உத்தரப்பிரதேசா மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்தவர் திர்த்தாரஜி. இவர் சிறுகச்சிறுகச் சேர்த்த ரூபாய் நோட்டுகளை ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக சமீபத்தில் மாற்றியதாகத் தெரிகிறது. இந்தநிலையில் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, வங்கிகளில் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இரண்டினை மாற்ற அவர் புதன்கிழமை சென்றதாகத் தெரிகிறது. ஆனால், வங்கி கிளை அதனை ஏற்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. இந்த அதிர்ச்சியில் அவர் வங்கியின் வாயிலிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பேசிய கோரக்பூர் மாவட்ட குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதி ஷம்பு குமார், பெண் உயிரிழந்தது தொடர்பாக அவரது வீட்டுக்கு சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளதாகவும், தகவல் உண்மையெனில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close