JUST IN
 • BREAKING-NEWS ராமேஸ்வரம் அருகே கடலில் மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன 5 மீனவர்கள் மீட்பு
 • BREAKING-NEWS ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 6 பேரை ஜூலை 7 வரை வவுனியா சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவு
 • BREAKING-NEWS நேபாளம், பூடானில் அடையாள அட்டையாக ஆதார் ஏற்கப்படாது: உள்துறை அமைச்சகம்
 • BREAKING-NEWS ராமேஸ்வரம் அருகே கடலில் மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள் கரை திரும்பவில்லை என புகார்
 • BREAKING-NEWS உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு தயாராக உள்ளது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
 • BREAKING-NEWS மாணவிகள் தங்களின் பாதுகாப்பிற்காக தற்காப்பு கலைகளை கற்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்
 • BREAKING-NEWS கருணாநிதி சார்பில் இஸ்லாமிய பெருமக்களுக்கு ரமலான் வாழ்த்துகள்: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS ரஜினி நன்கு படித்தவர்; அவரால் ஆங்கிலத்தில் உரையாற்ற முடியும்: பொன்.ராதா
 • BREAKING-NEWS எம்.பி மற்றும் எம்எல்ஏக்களின் பிள்ளைகள் அரசு பள்ளிகளில் பயில வேண்டும்:பொன்.ராதா
 • BREAKING-NEWS குளித்தலை: குப்பாச்சிபட்டியில் மணல் லாரிகளை மறித்து பொதுமக்கள் போராட்டம்
 • BREAKING-NEWS ஜிஎஸ்டி வரியால் விலைவாசி உயராது: நிர்மலா சீதாராமன்
 • BREAKING-NEWS அஞ்சுகிராமம் பகுதியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மக்கள் போராட்டம்
 • BREAKING-NEWS அஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டனில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்ரீ காந்திற்கு ரூ.5 லட்சம் பரிசு
 • BREAKING-NEWS அறம் தழைத்திட, சமாதானம் நிலவிட அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்து: விஜயகாந்த்
இந்தியா 07 Nov, 2016 09:40 PM

டெல்லியை அச்சுறுத்தும் காற்று மாசுபாடு.. மக்கள் தங்களை பாதுகாப்பது எப்படி?

டெல்லியில் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ள காற்று மாசுபாட்டால் சுவாசுக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். முக்கியமாக குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டு வருவதால் டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் பாதுகாப்பாக இருக்க, பின்பற்ற வேண்டிய அறிவுரைகள் கொடுக்கப்பட்டுள்ளது. என்னவென்று தெரிந்து கொள்வோம்..

உயர் காற்று மாசுபாடு உள்ள பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

ஆஸ்துமா உள்ளிட்ட நாள்பட்ட சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்ட மக்களும், நுரையீரல் சம்பந்தமான பிரச்னைகள் உள்ளவர்களும் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதேசமயத்தில் இம்மக்கள் அனைவரும் தினசரி எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகளை முறையாக சாப்பிடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மூச்சுத்திணறல், மயக்கம், மார்பக வலி, கண் எரிச்சல் உள்ளிட்டவை தோன்றினால் உடனடியான அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு சென்று முறையான சிசிச்சையை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்களது கண்களை அடிக்கடி சுத்தமான தண்ணீரால் கழுவிக்கொள்வது நலம்.

காற்று மாசுபாட்டால் பீதியடைய வேண்டாம். வைட்டமின் சி சத்து அதிகம் காணப்படும் ஆரஞ்சு, லெமன் ஆகியற்றை அடிக்கடி உண்பது நலம்.

சூடான தண்ணீரில் அடிக்கடி வாய்க்கொப்பளிப்பது நலம்.

மேற்கூறியவற்றை கடைபிடித்தால் ஓரளவிற்கு காற்று மாசுபாட்டிலிருந்து மக்கள் தங்களை தற்காத்து கொள்ளலாம்.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads