[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்

என்டிடிவி ஒளிபரப்புக்கு தடை ஏன்?..அமைச்சர் வெங்கய்ய நாயுடு விளக்கம்

ndtv-ban-not-based-on-newly-made-rule-or-principle-venkaiah-naidu

பயங்கரவாதத் தாக்குதல் செய்தி ஒளிபரப்பின்போது விதிகளை மீறியதாலேயே என்.டி.டி.வி ஹிந்தி தொலைக்காட்சிக்கு ஒருநாள் தடை விதிக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு விளக்கமளித்துள்ளார்.

சென்னையில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பயங்கரவாத தாக்குதல் குறித்த செய்தியை வழங்கும்போது, நாட்டின் பாதுகாப்பு கருதி அரசின் விதிகளை அனைத்து ஊடகங்களும் முறையாக பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். தாக்குதல் தொடர்பான நேரலையின்போது, ராணுவ வீரர்களின் செயல்பாடுகளை தொலைக்காட்சி மூலமாக பயங்கரவாதிகள் அறிந்துகொள்ள முடிவதாக வெங்கய்ய நாயுடு கூறினார்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியிலும் ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டதாகவும் அப்போது கொண்டுவரப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியே, தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறிய வெங்கய்ய நாயுடு, அதுபற்றி தெரியாமல் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி பேசி வருவதாகவும் விமர்சித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close