[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா
  • BREAKING-NEWS தமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை

பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க மறுத்த தாய் மீது வழக்குப் பதிவு

mother-does-not-gave-birth-to-the-baby-breast-feeding

கேரளாவில், பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க மறுத்ததாக பெற்றோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்‌துள்ளனர்.

இந்த அதிர்ச்சி சம்பவம் கோழிக்கோட்டிலுள்ள இ.எம்.எஸ். மருத்துவமனையில் நடந்துள்ளது. கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த அபுபக்கர்-அஃப்சத் தம்பதிக்கு சில தினங்களுக்கு முன் குழந்தை பிறந்துள்ளது. ‌இஸ்லாமிய மத குருவின் அறிவுரைப்படி, மசூதியிலிருந்து 5 முறை தொழுகைக்கான அழைப்புச் சத்தம் கேட்காதவரை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கக் கூடாது என்று மனைவியிடம் அபுபக்கர் கூறியுள்ளார். அதை ஏற்று, பெற்ற குழந்தைக்கு தாயும் பால் கொடுக்க மறுத்துவிட்டார்.

மருத்துவர்கள் எவ்வளவோ எடுத்துக் கூறியும் தாய்ப்பால் கொடுக்க அனுமதிக்க முடியாது என மறுத்துவிட்ட தந்தை அபுபக்கர், தனது மனைவி மற்றும் குழந்தையை மருத்துவமனையிலிருந்து கட்டாய டிஸ்சார்ஜ் பெற்று, அழைத்துச் சென்றுவிட்டார்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரை அடுத்து, பிறந்த குழந்தையின் உரிமையான தாய்ப்பாலை கொடுக்க மறுத்ததாக தாயார் மற்றும் தந்தை மீது கேரள காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிறார் நீதிச்சட்டப்படி இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

முன்னதாக, இந்த விவகாரத்தில் குழந்தையின் தாயிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தம்மை தலாக் செய்‌துவிடுவதாக கணவர் மிரட்டியதாலேயே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க மறுத்ததாக தெரிவித்திருக்கிறார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close