[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை

உளவு பார்த்ததாக பாக். துணைத் தூதரக அதிகாரியை பிடித்து விசாரணை

expelled-pak-high-commission-officer-met-alleged-spies-at-delhi-zoo

இந்திய ராணுவ ரகசியங்களை கடத்த முயன்ற பாகிஸ்தான் தூதரக அலுவலரின், தூதருக்குரிய அங்கீகாரத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. பாகிஸ்தான் தூதருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்திய பாதுகாப்புத்துறை ஆவணங்களை வைத்திருந்த பாகிஸ்தான் தூதரக அலுவலர் மெஹ்மூத் அக்தரைப் பிடித்து டெல்லி காவல்துறையினர் விசாரித்தனர். தூதரக அலுவலர் என்பதால் மெஹ்மூத் அக்தரை கைது செய்யாமல் டெல்லி காவல்துறையினர் விடுவித்துவிட்டனர். இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்துக்கு இந்திய வெளியுறவுத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்திய ராணுவ ரகசியங்களுடன் பிடிபட்ட பாகிஸ்தான் தூதரக அலுவலர் மெஹ்மூத் அக்தரின், தூதரக அதிகாரிக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மெஹ்மூத் அக்தருக்கு உதவிய ராஜஸ்தானைச் சேர்ந்த மவுலானா ரம்ஜான், சுபாஷ் ஜாங்கீர் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.க்கு உளவு பார்த்ததாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close